தமிழகத்தில் இன்று
நலிவடைந்த உரத் தொழிற்சாலைகள் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை - மத்திய அமைச்சர் தகவல்
புது தில்லி:
நலிவடைந்த உரத் தொழிற்சாலைகள் குறித்து மத்திய அரசு விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடும் என்றுமத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
ஹிந்துஸ்தான் உர நிறுவனம், மற்றும் இந்திய உரக் கழகம் ஆகியவற்றுக்குச் சொந்தமான ஆலைகள் மூடப்பட்டதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் பாசுதேவ் ஆச்சார்ய, லக்ஷ்மண் சேத் ஆகியோர் மக்களவையில்செவ்வாய்க்கிழமை கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்ப்புத் தீர்மானத்துக்கு அவர் அளித்த பதில்:
ஹால்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் உர நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலையை மூடிவிட அரசு ஏற்கெனவேமுடிவு செய்துள்ளது. ஆனால், மற்ற இரு நிறுவனங்களின் ஆலைகளை மூடுவது தொடர்பான முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு உடனடியாக முடிவு எடுக்கும்.
லாபகரமாக இயங்கக்கூடிய வாய்ப்புள்ள நலிவடைந்த நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துஅவற்றை மீண்டும் நன்றாக இயங்க வைக்கவேண்டும் என்பதும், உதவி செய்தாலும் லாபம் கிடைக்காது என்றநிலையில் உள்ள நிறுவனங்களை அவற்றின் ஊழியர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு மூடிவிடுவதுஎன்பதும் மத்திய அரசின் கொள்கையாகும். அதன்படிதான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
ஹிந்திஸ்தான் உர நிறுவனம் மற்றும் இந்திய உரக் கழகம் இரண்டையும் நலிவடைந்த நிறுவனங்களாக தொழில்மற்றும் நிதி மறுசீரமைப்பு வாரியம் அறிவித்துள்ளது. ஹிந்துஸ்தான் உர நிறுவனத்துக்கு துர்காபூர், பரானி, நாம்ரூப்,ஹால்டியா ஆகிய இடங்களிலும், இந்திய உரக் கழகத்துக்கு சிந்த்ரி, கோரக்பூர், ராமகுண்டம், தல்சேர், நாம்ரூப்ஆகிய இடங்களிலும் ஆலைகள் உள்ளன. இவற்றில், நாம்ரூப்பில் உள்ள ஹிந்துஸ்தான் உர நிறுவனத்துக்குச்சொந்தமான ஆலையும் சிந்த்ரியில் உள இந்திய உரக் கழகத்துக்குச் சொந்தமான ஆலையும் மட்டுமே தற்போதுஇயங்கி வருகின்றன.
நாம்ரூப் உரத் தொழிற்சாலையை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு ஒரு திட்டம் தீட்டி அதற்கு ரூ.350 கோடிஒதுக்கியுள்ளது. உர உற்பத்தித் தொழிலைக் காக்க புதிய உரக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வரும்.அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளுக்குப்போதுமான தரமான உரம், நியாயமான விலையில் கிடைக்க அனைத்து விதமான நடவடிக்கையையும் மத்தியஅரசு மேற்கொள்ளும்.
நலிவடைந்த உரத் தொழிற்சாலைகள் குறித்து மத்திய அரசு விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடும் என்றார்பிரபு.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications