For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரிக்கெட் சூதாட்டம்: பிந்த்ராவிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு

By Staff
Google Oneindia Tamil News

கே: நாங்கள் மண்ணுக்கேற்ற மார்க்சிஸத்தை பின்பற்றுகிறோம். கம்யூனிஸ்ட்கள்சீட்டுக்கு ஏற்ற மார்க்சிஸத்தைப் பின்பற்றுகிறார்கள் என்று ராமதாஸ்கூறியுள்ளாரே?

ப: சரி. ஆக மொத்தம் , யாருமே மனிதர்களுக்கேற்ற மார்க்சிஸத்தைப்பின்பற்றுவதில்லை என்பது புரிகிறதது.

கே: அ.தி.மு.க. சொத்துக்களை விற்க ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம்வழங்கப்பட்டுள்ளதே?

ப: இதற்கு அதிகாரமே தேவை இல்லையே! அ.தி.மு.க.வின் மிகப் பெரிய சொத்து -எம்.ஜி.ஆர். ஓட்டு. அதில் ஒரு பங்கை ஏற்கனவே ஜெயலலிதா விற்று விட்டாரே?

கே: பெண்கள் பெரும்பாலும் கள்ள ஓட்டு போடுவதில்லை, இதிலிருந்துபெண்களின் நல்ல குணம் தெரிகிறதா?

ப: இன்னொரு பெண்களின் ஓட்டை நாம் போட்டால், அந்தப் பெண்ணின் வேலையைநாம் செய்த மாதிரி ஆகி விடுமே? நாம் ஏன் மற்றொரு பெண்ணுக்கு இப்படி உதவவேண்டும்? வேண்டுமென்றால் அந்தப் பெண்ணே வந்து ஓட்டுப் போட்டுக்கொள்ளட்டுமே? என்று பெண்கள் நினைக்கிறார்களோ என்னவோ?

கே: தமிழக அரசியல் போக்கில் தங்களுக்கு ஆறுதல் தரும் விஷயம் எது?

ப: வாழப்பாடி; த.மா.கா; கம்யூனிஸ்ட்கள் போன்ற சிலர் விடுதலைப் புலிவிவகாரத்தில் எடுக்கிற நிலை.

கே: காந்தியடிகள் 20-ஆம் நூற்றாண்டின் மகாத்மா, கலைஞர் 21-ஆம்நூற்றாண்டின் மகாத்மா என்று அமைச்சர் ஆலடி அருணா ஒப்பிட்டுப்பேசியுள்ளது பற்றி...?

ப: அப்பா! அடேயப்பா! நூறே ஆண்டுகளில் காலத்தின் கோலம்தான் என்னே! கலிஇவ்வளவு சீக்கிரம் முற்றி வருகிறதா? அப்படியா அமைச்சர் நினைக்கிறார்!ஆச்சர்யமாக இருக்கிறது.

கே: முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மகளுக்கு ஊழல்வழக்கில் தண்டனை வழங்கப் பட்டுள்ளதே?

பச இந்தத் தீர்ப்பை முழுமையாகப் படிக்கிற வாய்ப்பில்லை. ஆனால் ஒரு தகப்பனார்,தன் மகள் பெயரில் சொத்து வாங்கினால், அந்த மகள் அதற்கு எப்படி பொறுப்பாவார்- என்பது எனக்கு விளங்கவில்லை. இந்த சொத்தை எப்படி வாங்கினீர்கள்? ஒழுங்கானபணத்திலா, அல்லது மோசடியா? என்று எந்த மகளாவது கேட்பாரா? முன்னாள்சபாநாயகர் மகள் மீது என்ன குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.தண்டனை கடுமையானது என்ற எண்ணம் ஏற்படுகிறது.

கே: நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எப்படிஇருக்கிறது?

ப: நெஞ்சைத் தொட்டுக்கொண்டு விட்டேன். திக்திக் என்று அடித்துக் கொள்கிறது.சட்டம் - ஒழுங்கு அப்படித்தான் இருக்கிறது. திக்திக்!

கே: தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி ஏற்பட்டால் எப்படி இருக்கும்?

ப:இதைக் கற்பனை செய்து பார்ப்பானேன்? அனுபவித்தே பார்த்துவிடும் வாய்ப்புநமக்குக் கிடைக்கக் கூடும். விடுதலைப் புலிகள், தமிழக அரசியல் கட்சி ஆகியவற்றின்கூட்டணி ஆட்சி ஏற்படக்கூடிய வாய்ப்பு தொலைவில் தெரிகிறது.

கே: நம்நாடு பெண் பிரதமர், பெண் கவர்னர், பெண் முதலமைச்சர்களைக் கண்டநாடு. இருந்தும் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதைத் தாங்கள்விரும்பவில்லையே ஏன்?

ப:அதுதான் அனுபவம் ஸார், அனுபவம்.

கே: தீடீரென்று ஒரு நாள் காலை நீங்கள் தூங்கி எழுந்திருக்கும்போது, உலகில்உள்ள பெண்கள் அனைவரும் காணாமல் போய், ஆண்கள் மட்டுமே இருந்தால்உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

ப: ஐயைய்யோ! எழுந்தவுடன் காபி குடித்ததாக வேண்டுமே? என்ன செய்வது?

கே: அ.தி.மு.க. விலிருந்து விலகி, தி.மு,க,. வில் இணைந்தவர்களை கனிந்தபழம் என்று கருணாநிதியும்; அழுகிய பழங்களைத்தான் தூக்கி எறிந்தேன் என்றுஜெயலலிதாவும் - விமர்சனம் செய்துள்ளது பற்றி...?

ப: ஆக மொத்தம் - பழம், பழத்தின் எதிர்காலம் என்ன? ஒன்று ஜூஸ் ஆகபிழியப்படலாம்; அல்லது - வெட்டியோ,கடித்தோ சாப்பிடலாம்; அதுவும்இல்லையென்றால் தூக்கி எறியப்படலாம். இதில் ஒன்றுதான் இவர்களுடையஎதிர்காலமா? பாவம்.

கே: மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டுவிட்டதாமே?

ப: அதனால் என்ன? நாலாவது அணி அமைக்க முனையலாமே! எல்லாம் ஒருபொழுதுபோக்குதானே!

கே: மனோஜ் பிரபாகருக்கு லஞ்சம் தர முன்வந்தது கபில்தேவ்தான் என்றுமுன்னாள் கிரிக்கெட் போர்டு தலைவர் பிந்தரா கூறியுள்ள குற்றச்சாட்டுகுறித்து...?

ப: பொய்யா, நிஜமா என்பது புரியவில்லை. டெண்டுல்கர் பெயரும் அடிபடுகிறது.உண்மையான விசாரணைஒன்று, ஒழுங்காக நடந்து முடியுமா -என்பதும்தெரியவில்லை. எல்லோருமே சந்தேகத்திகுரியவர்கள் தான் என்ற நிலைவந்து விட்டால் இவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, இந்தியா எப்படி கிரிக்கெட்மாட்சுகளுக்கு டீமைத் தேர்ந்தெடுப்பது? என்ற கேள்வி எழும்.அப்போது எல்லாமேபூசி மெழுகப்பட்டு விடலாம். ஆகையால் உண்மை வெளி வருமா, புதைக்கப்பட்டுவிடுமா என்பதும் புரியவில்லை.

கே: நீங்கள் துக்ளக்கை ஆரம்பிப்பதற்கு முன், உங்களை மற்ற பத்திரிக்கைகளில்எழுத ஊக்குவித்தவர்கள் யார்?

ப: சாவி, கல்கி ராஜேந்திரன், தமிழ்வாணன், ஆர்.வி., அழ. வள்ளியப்பா. இதில்நகைச்சுவை நாவல்கள் எழுத ராஜேந்திரன் அளித்த ஊக்கமும், அரசியல் கட்டுரைகள்எழுத சாவி அளித்த ஊக்கமும், துக்ளக்கில் எனக்கு மிகவும் உதவியது என்றுநினைக்கிறேன்.

(தொடர்ச்சி 2ம் பக்கம்...)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X