தமிழகத்தில் இன்று
சென்னை:
தேயிலைத் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
தேயிலை விலையை கிலோவுக்கு ரூ 15 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், தேயிலை இறக்குமதியை தடை செய்யக் கோரியும் நீலகிரி மாவட்டத்தில்தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப் போராட்டம் காரணமாக கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் சுற்றுலாப்பயணிகளின் வருகை பாதிக்கப்பட்டுள்ளது
கடந்த திங்கள்கிழமை 10, 000 க்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிலாளர்கள் ஊட்டியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சுற்றுலாப்பயணிகளைவரவிடாமல் தடுத்தார்கள். ஏலன்ஹள்ளி, தொட்டபெட்டா, கோத்தகிரி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வரை அவர்கள் சாலை மறியில்ஈடுபட்டார்கள்.
இதனால் குன்னூர், கோத்தகிரி, தொட்டநாடு பகுதிகளில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலாப்பயணிகளின் பஸ்கள் அங்கு வராதவாறு அவர்கள்போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பஸ்கள் மீது கல் வீச்சும் நடத்தப்பட்டது. போலீஸ் நிலையத்தைச் சூழ்ந்து கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.
அனைத்துக் கட்சிக்குழு:
இந்த நிலையில், தேயிலைத் தொழிலாளர் பிரச்சினையை சிலர் அரசியலாக்க முயற்சிக்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர்கூறுகையில், பிரச்சினையை சிலர் அரசியலாக்கப் பார்க்கிறார்கள். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு அனைத்துக் கட்சிக் குழு ஒன்றைஅமைக்கும். தேயிலை மீது விதிக்கப்பட்டிருந்த விற்பனை வரியை 4 சதவீதம் குறைப்பதற்கும் அக்குழு கலந்தாலோசித்து முடிவெடுக்கும்.
டீ தூளுக்கு கிலோவுக்கு ரூ. 5 மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இறக்குமதி மீதான 35 சதவீதமாக அதிகரிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது. விரைவில் நடக்க இருக்கும் அனைத்துக் கட்சிக் குழுக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications