தமிழகத்தில் இன்று
சுவா (பிஜி):

இந்திய வம்சாவழியினர் அதிக அளவில் வசிக்கும் பிஜி நாட்டில் வெள்ளிக்கிழமை ஃபிஜி இனத்தைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய பிரிவினர் புரட்சியின் மூலம்ஆட்சியைப் பிடித்தனர். இந்தியரான பிரதமர் மகேந்திர செளத்ரி புரட்சிக்காரர்களால் சிறை வைக்கப்பட்டுள்ளார். புரட்சிக்காரர்கள்நாடாளுமன்றத்தையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
புரட்சி நடத்தியவர்களின்
தலைவர் ஸ்பிட்
தெற்கு பசிபிக் கடலில் உள்ள சிறிய தீவு பிஜி. இந்திய வம்சாவழியினர் பெருமளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் பிஜியைத் தாயகமாகக்கொண்டவர்களுக்கும் இடையே காலம்காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.
வெள்ளிக்கிழமை காலை பிரதமர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கான பிஜி இனத்தவர்கள் கூடி, பிரதமர் செளத்ரிக்கு எதிராக கோஷம் இட்டனர்.மறுபுறம் ஆயுதம் தாங்கிய புரட்சிக்காரர்கள் பிரதமர் மாளிகையைச் சுற்றி வளைத்தனர். இதையடுத்து பிரதமர் செளத்ரி வீட்டுக் காவலில்வைக்கப்பட்டார்.
புரட்சிக்காரர்களில் ஒரு பிரிவினர் நாடாளுமன்றத்தைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். முகமூடி அணிந்து, ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் ஏழுபேர் நாடாளுமன்றத்தில் நுழைந்து அதைக் கைப்பற்றினர். எம்.பிக்களின் அறைகளை அவர்கள் பூட்டி சீல் வைத்தனர்.
முன்பே திட்டமிட்டு செய்தது போல இது அமைந்தது. புரட்சி நடந்த சில நிமிடங்களுக்குள் சர்வதேச தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
புரட்சியில் ராணுவத்திற்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. 1987-ல் இந்தியர்களைக் கொண்ட அரசுக்கு எதிராக புரட்சிநடந்தபோது, ராணுவமும் முக்கியப் பங்கு வகித்தது.
புரட்சியின்போது இரண்டு, மூன்று முறை துப்பாக்கியால் சுட்ட சப்தம் கேட்டதாக உள்ளூர் வானொலி நிருபர்கள் தெரிவித்தனர். இருப்பினும் யாரும்காயமடைந்ததாகத் தெரியவில்லை. எச்சரிக்கைக்காக சுடப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
புரட்சி நடந்த சில நிமிடங்களுக்குள் தலைநகர் சுவா முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளிகள் உள்பட கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.
புரட்சிக்காரர்களின் தலைவரான ஜார்ஜ் ஸ்பீட் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், பிஜி இனத்தவர் ஒவ்வொருவரின் சார்பிலும்நான் இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன். விரைவில் அரசியல் சட்டம் திருத்தப்படும். இடைக்கால அரசும் நிறுவப்படும்.
பிஜி இனத்தவருக்கே இந்தத் தீவு சொந்தமானது. இந்தப் புரட்சி மூலம் எங்களது உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. எங்களது அதிகாரம் எங்களிடமேவந்துள்ளது என்றார். ஸ்பீடின் பேச்சு இன்டர்நெட்டிலும் வெளியிடப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சாம் ஸ்பீட்டின் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 5000-க்கும் அதிகமான ஃபிஜி இனத்தவர்கள் பிரதமர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
- பிஜி- ஆட்--சி கவிழ்-ப்புக்-கு ரா-ணு-வத் தள-ப-தி எ-திர்ப்-பு
- புரட்சிக்காரர்களின் பிடியில் பிஜி ஜனாதிபதியின் மகள்
- பிஜி பிரதமர் மகேந்திர செளத்ரி பா-து-காப்-பா-க உள்-ளார்
- பிஜி புரட்சி: இந்-தி-யா கவ-லை


Click it and Unblock the Notifications
