தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
பிஜி- ஆட்--சி கவிழ்-ப்புக்-கு ரா-ணு-வத் தள-ப-தி எ-திர்ப்-பு

-சு-வா:

பிஜி புரட்சியை அங்கீகரிக்க தற்போதைய ராணுவத் தளபதி பிராங்க் பைனிமரமா மறுத்து விட்டார்.

இதற்-கி-டை-யே ஆயுதப் புரட்சி நடந்ததையடுத்து பிஜி தீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை ஜனாதிபதி ரத்து சர் கமிசசே மாரா பிறப்பித்தார்.
புதிய பிரதமர்
சிலடோலு

பிரதமர் மற்றும் பினைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வழக்கம் போல செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்புரட்சிக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதே கோரிக்கையை முன்னாள் பிரதமர் ஸிடிவேனி ரபுகாவும் விடுத்தார். இருப்பினும் கோரிக்கையை ஏற்கபுரட்சிக்காரர்கள் மறுத்து விட்டனர். புதிய பிரதமராக ரத்து டிமோசி சிலடோலு நியமிக்கப்பட்டுள்ளார்.

அருக்கு ஃபிஜி அசோசியேஷன் கட்சியின் அதிருப்தியாளர் பிரிவு தலைவர் ரத்து டுவாகிடாவ் கொகனாட்டோஉள்ளிட்ட எட்டு எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களைக் கொண்டு ஆட்சியமைக்க முடிவுசெய்திருப்பதாக திமோசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1987-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரபுகாவினால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட முன்னாள் ராணுவத் தளபதி ரத்துஎபலி நைலடிகாவ், மீண்டும் அப்பதவியில் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. அவர் நாடாளுமன்றத்திற்குவரலாம் என்று புரட்சிக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

புரட்சியை அங்கீகரிக்க ராணுவத் தளபதி மறுப்பு:

இதற்கிடையே ஃபிஜி புரட்சியை அங்கீகரிக்க தற்போதைய ராணுவத் தளபதி பிராங்க் பைனிமரமா மறுத்துவிட்டார். அவர் தற்போது நார்வேயில் உள்ளார்.

ஆயுதப் புரட்சியையடுத்து ஃபிஜியில் கலவரம் வெடித்தது. கடைகள் கட்டாயப்படுத்தி மூடப்பட்டன. திறந்திருந்தகடைகள் சூறையாடப்பட்டன.

தலைநகர் சுவாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் தெருக்களில் மக்கள் நடமாட்டம் வழக்கம்போலவே இருந்தது.

இரவில் கலவரம் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் போலீஸார் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்துள்ளனர்.

பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். சுவா பஸ் நிலையத்தில் பெரியஎண்ணிக்கையில் பொதுமக்கள் பஸ்ஸுக்காகக் காத்திருந்தனர்.

முதலாவது இந்தியப் பிரதமர்:

மகேந்திர செளத்ரி தேர்தல் மூலம் பிரதமர் பதவிக்கு வந்த முதலாவது இந்தியர். மொத்தம் 7,70,000 பேர் இத்தீவில் வசிக்கின்றனர். இவர்களில் 43சதவீதம் பேர் இந்தியர்கள்.

புரட்சியையடுத்து தீவு முழுவதும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளதாக நியூசிலாந்து வானொலி தெரி-வித்-துள்-ள-னர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+