தமிழகத்தில் இன்று
கோயம்புத்தூர்:
கைது செய்யப்பட்ட நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் அனைவரும் சனிக்கிழமை இரவு விடுதலைசெய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை பயிரிட்டு வரும் சிறு விவசாயிகள் தேயிலைக்கு ஆதார விலை கோரி போராட்டம்நடத்தி வருகின்றனர்.
இதன் உச்சகட்டமாக சனிக்கிழமை சாலைமறியல், பஸ்கள் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. 25 பஸ்கள்அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு தீயணைப்பு வண்டியும் இதில் சேதமடைந்தது.
விவசாயிகளின் தொடர் போராட்டத்தில் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்கக் கோரிசனிக்கிழமை எல்லநள்ளி என்ற இடத்தில் சாலை மறியல் நடந்தது. 2 ஆயிரம் பேர் இந்த வேலை மறியலில்ஈடுபட்ட போது மத்திய பொதுத்துறை அமைச்சர் மனோகர்ஜோஷி அந்த வழியாய்ச் செல்ல வேண்டியிருந்தது.
இதனால் அங்கு போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் பதட்டம் உருவானது. பின்னர் அதிகாரிகளும்,எம்எல்ஏ எம்பி ஆகியோர் தலையிட்டு சமரசம் செய்தனர்.
நீலகிரியில் கைது செய்யப்பட்டு கோவை அருகே உள்ல கவுண்டம்பாளையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளஇரண்டாயிரம் விவசாயிகளை விடுவிக்க சனிக்கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து கைதுசெய்யப்பட்ட அனைவரும சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications