செஸ் போட்டியிலும் "மேட்ச் ஃபிக்ஸிங்"

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

சமீபத்தில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளால் கிரிக்கெட் விளையாட்டின் மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ள நிலையில்,செஸ் விளையாட்டிலும் மேட்ச் பிக்ஸிங் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

அதுவும், சர்வதேச செஸ் அமைப்பான ஃபைடு (FIDE) அமைப்பு சார்பில் இளம் வீரராகத் தேர்வு செய்யப்பட்ட 7வயதான கேரளத்தின் சி.எம். கவுரிசங்கர், இத்தகைய மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாகக்கூறப்படுகிறது. மே 15 முதல் 20 வரை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற செஸ் போட்டியில் கவுரிசங்கர் 6.5புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேட்ச் ஃபிக்ஸிங்கில் கவுரி சங்கர் ஈடுபட்டதாக முதலில் குற்றம் சாட்டியவர் வி.ஆர். வினோத். இது தொடர்பாக,ஃபைடு அமைப்பின் தலைவருக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்தார். திருவனந்தபுரம் போட்டியில்ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாக அந்த இ-மெயிலில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து தேசிய செஸ் ஃபெடரேஷனுக்கு ஃபைடு தலைவர் தகவல் தெரிவித்தார். இத் தகவலை அடுத்து,உடனடியாக விசாரணை நடத்தும்படி அனைத்து கேரள செஸ் சங்கத்துக்கு தேசிய செஸ் ஃபெடரேஷன்உத்தரவிட்டுள்ளது.

விசாரணை முடிந்து அடுத்த 10 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கேரள செஸ் சங்க அதிகாரிகள்தெரிவித்தனர்.

திருவனந்தபுரம் போட்டி, இளம் ஃபைடு வீரரைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்டது. அதுவும் கவுரிசங்கருக்குஇச் சிறப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காகவே இப் போட்டி நடத்தப்பட்டது. கவுரி சங்கர் பெற்ற 6.5 புள்ளிகளில்5.5 புள்ளிகள் முறைகேடுகளின் மூலம் பெற்றவை.

இளம் ஃபைடு வீரர் என்ற சிறப்பைப் பெற குறைந்தது 5.5 புள்ளிகள் பெற வேண்டும். ஆனால், 10-வது சுற்றின்முடிவில் 3.5 புள்ளிகளே பெற்றிருந்த கவுரிசங்கர் அடுத்த மூன்ற சுற்றுகளிலும் வெற்றி பெறும் வகையில்அவருடன் விளையாடி சிறந்த, திறமையான, முதுநிலை வீரர்கள் தோல்வியடைந்தனர். இதில் முறைகேடுநடந்துள்ளது என்று கவுரிசங்கர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+