இப்போது எனது கவனம் -எல்-லாம் ஆசியக் கோப்பை மீதுதான் - கபில் தேவ்
டெல்லி:
இப்போதைய எனது கவனம் முழுவதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் பற்றித்தான் என்று இந்திய அணியின்பயிற்சியாளர் கபில் தேவ் கூறியுள்ளார்.
1994-ம் ஆண்டு இலங்கையில் நடந்த சிங்கர் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மோசமாகவிளையாடும்படி எனக்கு ரூ.25 லஞ்சம்கொடுக்க கபில் தேவ் முன் வந்தார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்மனோஜ் பிரபாகர் குற்றம் சாட்டியுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய குற்றச்சாட்டைக் கூறிய பிரபாகர், சம்பந்தப்பட்ட வீரரின் பெயரைத்தெரிவிக்காமல் தனக்கு லஞ்சம் கொடுக்க ஒரு வீரர் முன் வந்தார் என்று மட்டும் கூறியிருந்தார்.
பிரபாகரின் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு எழுந்த பல்வேறு பிரச்சினைகளை அடுத்து கிரிக்கெட் சூதாட்டம்பற்றிய விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந் நிலையில், தனியார் நிறுவனத்துக்கு புதன்கிழமை அளித்த விடியோ பேட்டியில் மட்டுமல்ல நிருபர்களிடம்பேசிய பிரபாகர், தனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது கபில்தேவ்தான் என்று வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார்.
பிரபாகருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது கபில்தேவ்தான் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமுன்னாள் தலைவர் ஐ.எஸ். பிந்த்ரா சில நாட்களுக்கு முன் கூறினார். ஆனால், அதை கபில்தேவ் திட்டவட்டமாகமறுத்துள்ளார்.
இப்போது இப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பிரபாகரே, நேரிடையாக கபில் தேவ் மீது குற்றம் சாட்டியுள்ளார்.ஆனால், அது குறித்து கபில் தேவ் எந்தக் கருத்தையும் கூறவில்லை. முக்கியமாக அக் குற்றச்சாட்டை மறுத்தும்கருத்து தெரிவிக்கவில்லை.
பிரபாகரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் தெரிவிக்கும் நிலையில் இப்போது நான் இல்லை. எனது இப்போதையமுழு கவனமும், ஆசியக் கோப்பை மீதுதான். இந்திய அணியின் பயிற்சியாளர் என்ற முறையில் ஆசியக்கோப்பைக்கு இந்திய அணியை முழுமையாகத் தயார்படுத்தவேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.
குற்றச்சாட்டு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.டாக்கா சென்று வந்த பிறகு குற்றச்சாட்டுகள் குறித்து பார்க்கலாம் என்றார் கபில் தேவ்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications