தமிழகத்தில் இன்று
ஏர் இந்தியா நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு
டெல்லி:
ஏர்-இந்தியா நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலீட்டைத் திரும்பப் பெறுவதுதொடர்பான அமைச்சரவை கமிட்டிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு, முதலீட்டைத்திரும்பப் பெறும் துறையின் அமைச்சர் அருண் ஜேட்லி, நிருபர்களிடம் கூறியதாவது:
நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவுசெய்தது. அது தொடர்பாக, வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சரவை கமிட்டிக் கூட்டத்தில் இறுதி முடிவுஎடுக்கப்பட்டது.
அதன்படி, ஏர் இந்தியா நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை மத்திய அரசே வைத்துக் கொள்ளும். மீதமுள்ள 60சதவீத பங்குகள் வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிதி அமைப்புகளும், தனியார்களுக்கும், ஏர் இந்தியாநிறுவன ஊழியர்களுக்கும் விற்கப்படும்.
தனியார் அமைப்புகளுக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ள 60 சதவீத பங்குகளில், 40 சதவீதம் வெளிநாட்டுவிமான நிறுவனங்களுக்கு விற்கப்படும். 10 சதவீதம் உள்நாட்டு நிதி நிறுவனங்களுக்கும், மீதமுள்ள 10 சதவீதபங்குகள் ஏர் இந்தியா ஊழியர்களுக்கும் விற்கப்படும்.
மத்திய அரசின் இந் நடவடிக்கையின் மூலம் ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாக தனியார்மயமாக்கப்படாது.மேலும் அந் நிறுவனத்தின் 74 சதவீத கட்டுப்பாட்டு இந்தியர்களிடம்தான் இருக்கும்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பது தொடர்பாக மத்திய அரசு தனிப்பட்ட முறையில் முடிவுஎடுக்கவில்லை. முதலீட்டைத் திரும்பப் பெறுவது தொடர்பாக நியமிக்கப்பட்ட கமிஷனின் பரிந்துரையின்படிதான்இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் லாபத்தில் இயங்க வைக்கவே இந்த முடிவைமத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 60 சதவீத பங்குகளை விற்க கால இலக்கு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லைஎன்றார் அருண் ஜேட்லி.
யு.என்.ஐ.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications