3-வது டெஸ்ட்: பாகிஸ்தானை காப்-பாற்-றி-னார் யுகானா

Subscribe to Oneindia Tamil

செயின்ட் ஜான்ஸ் (ஆன்டிகுவா):

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, ஆன்டிகுவாவில் நடைபெற்று வரும் 3-வது கிரிக்கெட் டெஸ்டில் பாகிஸ்தான்தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்துள்ளது.

வியாழக்கிழமை துவங்கிய இந்த டெஸ்டில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானை முதலில்பேட் செய்யும் படி கேட்டுக் கொண்டது. அதன்படி பாகிஸ்தான் வீரர்கள முகம்மது வாஸிம், இம்ரான் நசீர்இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்.

பாகிஸ்தானை முதலில் பேட் செய்யச் சொன்னதற்குப் பலனாக அந்த அணியின் முதல் 3 விக்கெட்டுகளைமேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் வீழ்த்தினர். கடந்த டெஸ்டில் சதமடித்ததன் மூலம் மிகக்குறைந்த வயதில் டெஸ்ட் சதமடித்த 3-வது வீரர் என்ற பெருமையைப் பெற்ற இம்ரான் நசீர் 10 ரன்களே எடுத்தார்.அவருடன் ஆட்டத்தைத் துவக்கிய வாஸிம் 13 ரன்களும், அடுத்து வந்த யூனிஸ் கான் 4 ரன்களும் எடுத்தனர்.

இதனால், 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தவித்தது. அந்த நேரத்தில் களமிறங்கியஇன்சமாம் உல் ஹக்கும், யூசுப் யுகானாவும் நிலைத்து ஆடினர். இருவரும் பொறுப்புடன் விளையாடி 4-வதுவிக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தனர். இந் நிலையில், 55 ரன்கள் எடுத்திருந்த இன்சமாம் உல் ஹக் ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த அப்துர் ரஸாக் வெகு நேரம் நிற்காமல் 2 ரன்களில் அவுட்டானார்.

அவரைைத் தொடர்ந்து வந்த மோயின் கான், வாசிம் அக்ரம் ஆகியோர் ஓரளவு நிலைத்து ஆடினர். இருப்பினும் 24ரன்னில் மோயின் கானும், 26 ரன்னில் வாஸிம் அக்ரமும் அவுட்டானர்கள். அவர்களது துணையுடன் யுகானா தனது3-வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். முதல் நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 267ரன்கள் எடுத்திருந்தது. யுகானா 102 ரன்களுடனும், வக்கார் யூனிஸ் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் உலக சாதனையாளர் வால்ஷ் 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஆம்புரோஸ், ரோஸ் இருவரும் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+