For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஹவாய் தீவில் அமெரிக்காவின் தலைமையில் 7 நாடுகள் போர்ப் பயிற்சி

வாஷிங்டன்:

அமெரிக்காவின் ஹவாய் தீவு கடலில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஏழுநாடுகள் போர்ப் பயிற்சியைத் துவங்கியுள்ளன.

செவ்வாய்க்கிழமை துவங்கிய இந்த போர்ப் பயிற்சி ஒரு வாரத்திற்கு நடைபெறும்.போர்ப் பயிற்சி ரிம்பாக்-2000 என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. பசிபிக்பிராந்திய நாடுகளான ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், தென் கொரியா ஆகியவைபயிற்சியில் கலந்துகொண்டுள்ள பிற நாடுகள்.

5 கடற்படைக் கப்பல்கள், 22,000 வீரர்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகஅமெரிக்கா ராணுவத் தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது.

அமெரிக்க விமானம் தாங்கிக கப்பல், நீர் மூழ்கிக் கப்பல்கள் ஆகியவையும் இந்தப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மூன்றாவது பிரிவு கடற்படைக்கப்பல் இதற்குத் தலைமை தாங்குகிறது.

1971-ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த போர்ப் பயிற்சி நடந்துவருகிறது. தற்போது நடப்பது 17-வது பயிற்சி ஆகும்.

போர்ப் பயிற்சிக்குப் பிறகு படைகள் அனைத்தும் அமெரிக்க கடற்படைத் தளமானபியர்ல் ஹார்பருக்குச் செல்லும் என்றும் பென்டகன் அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X