தமிழகத்தில் இன்று
அஸ்ஸாமில் பங்களாதேஷ் தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க நடவடிக்கை
டெல்லி:
அஸ்ஸாம் மாநிலம் வழியே பங்களாதேஷ் நாட்டினர் இந்தியாவுக்குள் ஊடுருவதைத் தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசுவட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவுக்குள் பங்களாதேஷ் நாட்டினர் சட்டவிரோதமாக ஊடுருவுவதை ஒரு பெரிய பிரச்சினையாக மத்திய அரசு கருதுகிறது. இதைத் தடுக்க தக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, அஸ்ஸாம் மாநில எல்லையை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பங்களாதேஷிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுகின்றனர். இதுவரை எவ்வளவு பேர்ஊடுருவியுள்ளனர் என்ற புள்ளி விவரம் இல்லை. பங்களாதேஷ் நாட்டினரின் சட்டவிரோத ஊடுருவல் குறித்து அந் நாட்டிடம் இந்தியா பல முறைஎடுத்துரைத்துள்ளது. இது தொடர்பாக, இரு நாடுகளும் பலமுறை பேச்சு நடத்தியுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications