முகத்தில் தெளித்த சாரல்...
பிஜியின் வழியில் சாலமன் தீவுகள்...
கான்பெர்ரா:
சாலமன் தீவுகளில், ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள், ஆட்சியைப் பிடித்துள்ளனர். பிரதமர்வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். தலைநகர் ஹோனியரா, தீவிரவாதிகள் பிடியில்உள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
மலதியன் ஈகிள்ஸ் என்ற பெயர் கொண்ட அந்த தீவிரவாதிகள் அமைப்பு, திங்கள்கிழமைஅதிகாலை, பயங்கர ஆயுதங்களுடன் தலைநகர் ஹோனியராவுக்குச் சென்றது.தலைநகரிலுள்ள அரசின் பல்வேறு நிறுவனங்களை அவர்கள் ஆயுத முனையில்கைப்பற்றினர்.
தலைநகரிலுள்ள தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன.தலைநகர் ஹோனியரா இப்போது தீவிரவாதிகள் வசம் வந்து விட்டதாக தெரிவதாகவும்,பிரதமர் பார்த்தோலோமேயூ உலுபா ஆலு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.
ஆஸ்திரேலிய வானொலிச் செய்தியில், தலைநகர் ஹோனியராவில் ஆயுதம் தாங்கியதீவிரவாதிகள் ரோந்து சுற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
சாலமன் தீவுகளில் உள்ள குடல்கனால் மற்றும் மாலதியா ஆகிய இரு தீவுகளில் உள்ளதீவிரவாதிகளுக்கிடையே, கடந்த 18 மாதமாக மோதல் இருந்து வருகிறது. இவர்கள் நம்ஊர் பேட்டை ரெளடிகள் போல. இந்தத் தீவிரவாதிகளுக்கு இஸ்தாபு புரட்சிகர முன்னணிமற்றும் மாலதியா ஈகிள்ஸ் என்று பெயர். இவர்களது மோதலில் இதுவரை 60 பேர்கொல்லப்பட்டுள்ளனர்.
பிரதமர் ராஜினாமா செய்ய கோரிக்கை:
சாலமன் தீவுகளில் ஆட்சியைப் பிடித்துள்ள மாலதியா ஈகிள்ஸ் தீவிரவாதிகள், பிரதமர்உலுபா ஆலு பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் டெளனர் கூறுகையில்,தலைநகர் ஹோனியரா தீவிரவாதிகள் வசம் உள்ளது. தீவிரவாதிகளின் தலைவர் ஆண்ட்ரூநோரி, பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
சாலமன் தீவுகளின் தலையெழுத்து குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாத நிலைஉள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் இதுகுறித்து தெரிய வரலாம்.
காவல் நிலையங்கள், தொலைத் தொடர்பு மையம் ஆகியவற்றை தீவிரவாதிகள்கைப்பற்றியுள்ளனர் என்றார் அவர்.
ஆஸ்திரேலியாவுக்கு வட கிழக்கில் 1800 கிலோமீட்டர் தொலைவில் கடலில் உள்ளதுசாலமன் தீவு. இதே தெற்கு பசிபிக் கடலில் உள்ள பிஜித் தீவில் சமீபத்தில்தான் புரட்சிநடந்து, அங்கு ஒரே குழப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications