முகத்தில் தெளித்த சாரல்...
கோவை:
தொட்டால் நஷ்டம், விட்டால் கஷ்டம் என்ற பரிதாபத்தில் நீலகிரி மாவட்ட தேயிலைவிவசாயிகளின் நிலை உருவாகியுள்ளது.
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் போராட்டம் சமீபத்தில் தமிழகத்தில் பெரும்பரபரப்பை உருவாக்கியது. பசுந் தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்ததால் நீலகிரிமாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலை தான் விரக்தியாக மாறி, கஞ்சா பயிரிட அரசு அனுமதிக்க வேண்டும் என்றகோரிக்கையை த.மா.கா., மாவட்ட தலைவர் உச்சிகவுடர் கோர, விவகாரம் வெடிக்கத்தொடங்கியது. விவசாயிகள் உண்ணாவிரதம், பந்த், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்என விதவிதமான ஆர்ப்பாட்டம் நடத்த, வணிகர்களும் ஆதரவுக் கரம் நீட்டினர்.
பிரச்சனை என்ன?
அரசின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு அப்படி என்னதான் விவசாயிகளுக்குப்பிரச்சினை?. சுருக்கமாக சொன்னால் நீலகிரியில் தேயிலை உற்பத்தி செய்யும் சிறுவிவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரத்தை தாண்டும். இவர்கள் உற்பத்திசெய்யும் தேயிலையை பச்சை இலையாக தொழிற்சாலைகளுக்கு அளிக்கின்றனர். உலர்தேயிலையாக மாற்றி அது விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்தில் பசுந் தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்தது. கிலோ ஒண்றிற்கு ரூ 15 வரைவிற்ற தேயிலை தற்போது ரூ 5 அல்லது 6 ரூபாய் அளவிற்கே விற்பனையாகிறது.தேயிலை உற்பத்தி செலவில் பாதி அளவிற்கு தான் இந்த விலை விவசாயிகளுக்குகட்டுபடியாகிறது. எனவே, அரசு கட்டுப்படியாகும் விலை நிர்ணயம் செய்யவேண்டும், விலைச் சரிவை ஈடுகட்ட அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என்றகோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால்இதுவரை பசுந் தேயிலை விலை வீழ்ச்சி அடைந்தது ஏன்? என்ற கேள்வி புதிராகவேஉள்ளது.
இருந்த போதிலும், மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் மாறன், நிதியமைச்சர்யஷ்வந்த் சின்கா, பிரதமர் வாஜ்பாய், முதல்வர் கருணாநிதி ஆகியோர் வரை இந்தப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டு.சிறு நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைக்கநடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு நிவாரணம் என்ன?
மாநில அரசு தேயிலை மீதான விற்பனை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாககுறைத்துள்ளது. மத்திய அரசு தேயிலை இறக்குமதியை கட்டுப் படுத்த சுங்க வரியை 15சதவீதத்திலிரூந்து 35 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்ட விவசாயிகளின் இந்த பிரச்சனையை அரசின் கவனத்திற்கு த.மா.கா.தலைவர் உச்சிகவுடர் கொண்டு செல்ல புதிய யுக்தியை கையாண்டார். கஞ்சாபயிரிடுவோம் என்று அறிவித்தார். அதே சமயம், தேயிலை பிரச்சனையை பற்றிஅரசுடன் பேச்சு வார்த்தை நடத்த முன்னின்று செயல்பட்டவர் நீலகிரி மாவட்ட எம்.பி.மாதன் தான்.
மாஸ்டர் மதன் "இண்டியா இன்போ.காம்க்கு அளித்த பேட்டியில் தேயிலை பிரச்சனைபற்றி கூறியதாவது:
தேயிலை விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக ஏற்றுமதி குறைந்து போனதைசொல்லலாம். ரஷ்யாவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பிறகு, நமதுதென்னிந்தியாவில் தேயிலை ஏற்றுமதி குறைந்து போனது. எனவே மீண்டும்ரஷ்யாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்ய போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம். இலங்கை தேயிலை இறுக்குமதியால் இங்குள்ள தேயிலைமார்க்கெட்டிற்கு அவ்வளவாக பாதிப்பு இல்லை.
தேயிலை விலை வீழ்ச்சி என்பது நீலகிரி மாவட்டத்தில் புதிதல்ல. கடந்த 1992-ம்ஆண்டு 2 ரூபாய்க்கு பசுந் தேயிலை விற்றது. ஆனால் தற்போது சூழ்நிலைமாறிப்போனது. கூலி உயர்வு உள்பட உற்பத்தி செல்வு அதிகரித்ததால் விலைகடடுப்படியாகவில்லை. விவசாயிகள் போராடத் துவங்கியுள்ளனர்.
எனவே, இப்பிரச்சனையை அரசு விவசாயிகளின் நலனை காக்க எடுக்க வேண்டியநடவடிக்கை, தேயிலையை அரசே கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தின்மூலம் விற்பனை செய்ய வேண்டும்.இது ஒன்றுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்.
சிறு விவசாயிகளுக்கு தேயிலை கிலோ ரூ 15க்கு கொள்முதல் செய்யப்பட்டால்மட்டுமே விலை கட்டுப்படியாகும் என கருதுகிறேன் என்று மாஸ்டர் மதன் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications