மு-தல்-வ-ரின் பிற-ந்-த நாள் வசூல் ரூ. 39 லட்-சம்

Subscribe to Oneindia Tamil

அலுவலகம் தேடும் தமிழக காங்கிரஸ் தலைவர்

சென்னை:

தமிழக காங்கிரசின் புதிய தலைவராக நியமிக்கப்படடுள்ள இளங்கோவன் வருகிற 11ம் தேதி பதவியேற்கிறார். அவர் பதவியேற்பதற்காககட்சிக்கென புதிய அலுவலகம் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து திண்டிவனம் ராமமூர்த்தி நீக்கப்பட்டு, புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்டதும்,கட்சி அலுவலகத்தையே காலி செய்து சென்று விட்டனர்.

இதனால் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் பதவியேற்க முடியாமல் டெல்லியிலேயே இருக்கிறார். தமிழகத்தில் திண்டிவனம் ராமமூர்த்திஆதரவாளர்கள் எழுப்பிய போர்க் குரல் தணிந்த பிறகு டெல்லி செல்லுங்கள் என்று கட்சி மேலிடம் கட்டளையிட்டதால் அங்கேயே காத்திருக்கிறார்.

ஆனால், திண்டிவனம் ராமமூர்த்தி கோஷ்டியினரோ, பதவி போன கோபத்தில் அலுவலகத்தை காலி செய்து சுத்தம் செய்து விட்டு சென்று விட்டதால், புதியதலைவர் எந்த அலுவலகத்தில் பதவியேற்பது என்ற பிரச்னை எழுந்துள்ளது.

புதிய அலுவலகம் தேடும் பொறுப்பு முன்னாள் தலைவர் எம்.பி.சுப்ரமணியம், முன்னாள் எம்.பி.அன்பரசு ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இருவரும் புதிய அலுவலகத்தை தயார் செய்யும் பணியில் முழு மூச்சுடன் இறங்கியுள்ளனர்.

இதற்கிடையில் திண்டிவனம் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் தீவிர பரிசீலனையில் ஈடுபட்டுள்ளது.

கட்சி அலுவலகத்தை காலி செய்ததோடு, அங்கிருந்த கம்ப்யூட்டர் போன்ற பொருட்களையும் எடுத்துச் சென்று விட்டது தொடர்பாக திண்டிவனம்ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்பரசு போன்றவர்கள் கட்சி மேலிடத்தை வலியுறுத்தத் துவங்கியுள்ளனர்.

இப்பின்னணியில் புதிய தலைவருடன் இணைந்து செயல்பட தங்கபாலு ஆதரவாளர்கள், குமரி அனந்தன் ஆதரவாளர்கள் தயாராக இருக்கிறார்களா இல்லையாஎன்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து முடிவு செய்வதற்காக தங்கபாலு ஆதரவாளர்கள் 10-ம் தேதி திங்கள் கிழமை சென்னையில் கூடிப் பேசுகின்றனர். அதன் பின்னரே எங்கள்நிலையை அறிவிப்போம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் புதிய தலைவருக்கு ஆதரவு அளிப்பதா வேண்டாமா என்பது குறித்து தாம் இன்னம் முடிவு செய்யவில்லை என்று குமரிஅனந்தன்தெரிவித்துள்ளார்.

தலைமை மாற்றம் குறித்து டெல்லிக்கு எங்களை அழைத்து கருத்து கேட்டனர். தேர்தல் வரும் நேரத்தில் அனுபவமிக்க தலைவரை நியமிப்பது நல்லது என்றகருத்தை தெரிவித்தோம். ஆனால், புதியவரை கட்சி நியமித்துள்ளது.

இந்நிலையில் என்னுடைய ஆதரவாளர்கள் என்னை சந்தித்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் நாங்கள் தனியாக ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம்என்றார் அனந்தன்.

கட்சியில் நிலவும் கடும் குழப்பத்திற்கு இடையில் 11ம் தேதி பதவியேற்க இளங்கோவன் திட்டமிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+