மு-தல்-வ-ரின் பிற-ந்-த நாள் வசூல் ரூ. 39 லட்-சம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
யாழ்ப்பாணத்தில் தென்மராச்சி பகுதியில் மடுவில் என்ற இடத்தில் ராணுவம் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டார். பலர்காயமடைந்தனர்.
சுலிபுரத்தைச் சேர்ந்த ராசம்மா சபாரத்தினம் என்ற பெண் குண்டுவீச்சில் இறந்தவர் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குண்டுவீச்சில் அவரதுவீடும் பக்கத்து வீடு பாதிக்கப்பட்டது. கொல்லப்பட்ட ராசம்மாவின் உடல் அவரது வீட்டு வளாகத்திலேயே எரிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் மருதபிள்ளவர் கோவில் பூசாரியான, ஞானச்சந்திர ஐயர் உள்பட பலர் காயமடைந்தனர். பிறருடைய அடையாளம் தெரியவில்லை. பலர்கோமாவில் உள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகளின் ரேடியோவில் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.
மாணவர்கள் போராட்டம் நீடிக்கிறது:
இதற்கிடையே, திரிகோணமலையில் போலீஸாரால் பிடித்துச் செல்லப்பட்ட இரண்டு பள்ளி மாணவர்களை விடுவிக்கக் கோரி திரிகோணமலையிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் அனைத்திலும் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தி வருகின்றன்.
இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இந்தப் போராட்டம் நீடித்தது. செல்வநாயபுரம் தமிழ் மகா வித்யாலயத்தைச் சேர்ந்த படித்து வரும் 11-வதுவகுப்பு மாணவனான நாகராஜா கங்கேஸ்வரன் என்ற மாணவனை போலீஸார் விசாரணைக்காகப் பிடித்துச் சென்றனர்.
கடந்த வியாழக்கிழமை கங்கேஸ்வரனை போலீஸார் பிடித்துச் சென்றனர். இவனது பெற்றோர் உப்புவேலி பகுதியிலுள்ள அல்லஸ் கார்டன் அகதிகள்முகாமில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications