தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

நிதி உ-த-வி கேட்-டு ராமதாசிடம் சந்-த-ன கடத்-தல் வீரப்-பன் மகள் ம-னு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மேட்-டூர்:

மேட்டூர் வந்த பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸிடம் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் மனு கொடுத்தாள். எங்கள் வாழ்க்கைக்கு வழிசெய்யுங்கள் என்று அதில் கோ-ரிக்கை விடப்பட்டிருந்தது.

சந்தன கடத்தல் வீரப்பன், காடுகளில் மறைந்து வாழ்கிறான். தமிழக-கர்நாடக மாநில அதிரடிப்படை போலீஸார் தீவிரமாக முயற்ச்சித்தும் -க-டந்-த10 ஆண்-டு-க-ளா-க அவனை பிடிக்க முடியவில்லை.

சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தனது மகள் வித்யாராணியுடன் (வயது - 8 ) மேட்டூ-ரில் வாழ்ந்து வருகிறார். வித்யாராணி அங்குள்ளபள்ளிக்கூடத்தில் 3 - வது படித்துவருகிறாள்.

-இந் நி-லை-யில் மேட்டூரில் நடந்-த பா.ம.க மாநாட்டில் கலந்-து -கொள்-ள கட்-சி-யின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் அங்-கு சென்--றார். அப்பொழுதுசந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி மேடையில் ஏறி டாக்டர் ராமதாஸிடம் மனு கொடுத்தாள். அந்த மனுவில் வீரப்பனின் மனைவிமுத்துலட்சுமி எழுதியிருப்பதாவது:

என் மகள் வித்யாராணியுடன் நான் மேட்டூ-ரில் ஒர்க்ஷாப் கார்ன-ரில் தூரத்து உறவினர் உதவியால் பெட்டிக்கடை வைத்து பிழைத்து வருகிறேன். ஆனால்பெட்டிக்கடையில் விற்பனை செய்ய பொருட்கள் வாங்க பணமில்லை. மேலும் வித்யாராணி -முன்பு விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தாள். அதற்கும் பணம்கட்ட -முடியாததால் இப்பொழுது என்னுடன் தங்கியிருந்து படித்து வருகிறாள்.

வறுமையில் வாழும் எங்களுக்கு நிம்மதியாக வாழ வழிசெய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் எழுதியிருந்தது.

வீரப்பனின் மிக -முக்கிய கூட்டாளியாக இருந்து போலீஸா--ரிடம் மாட்டிக்கொண்டவன் அர்சுனன். அர்சுனனை போலீஸார் வேனில்அழைத்துச்சென்றபொழுது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.

அர்சுனனின் மனைவி தங்கம்மாள். இவளும் டாக்டர் ராமதாஸிடம் மனு ஒன்றைக்கொடுத்தாள் . அந்த மனுவில் நான் என் மகன் பொன்னுசாமி,மகள் நதியாவுடன் வறுமையில் வாழ்க்கை -நடத்திவருகிறேன். என் மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். மகள் -நான்காம் வகுப்பு படித்துவருகிறாள். ஆனால் படிப்பு செலவுக்கு பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுவருகிறோம். உதவி செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார் தங்கம்மாள்.
சந்-த-ன -வீ-ரப்-பன் ம-க-ளுக்-கு உத-வ முன் வந்-த-து கு-ழந்-தை-கள் அமைப்-பு

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற