லஞ்சம் வாங்க தூண்டப்பட்டேன் - குரோனியே
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கேப் டவுன்:கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடமிருந்து லஞ்சம் வாங்கத் தூண்டப்பட்டேன். அப்போதுநான் குழப்பமான மனநிலையில் இருந்தேன் என்று தென் ஆப்பிரிக்க அணியின்முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியே தெரிவித்தார்.மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குரோனியே மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.இதையடுத்து தென் ஆப்பிரிக்க கேப்டன் பொறுப்பிலிருந்தும் அணியிலிருந்தும் அவர்நீக்கப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிபதி எட்வின் கிங்தலைமையில் தனி விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது.விசாரணைக் கமிஷன் முன் புதன்கிழமை ஆஜரான குரோனியேவிடம் கேள்விகள்கேட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது குரோனியே கூறியதாவது:5 ஆண்டுகளுக்கு முன் என்னை கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் அணுகினர். எனக்குபண ஆசை காட்டி என்னைத் தூண்டினர். சூதாட்டக்காரர்களிடமிருந்து பணம்பெற்றதை நினைத்து இப்போது நான் வருந்துகிறேன்.சூதாட்டக்காரர்களிடமிருந்து 5.8 லட்சம் டாலர் லஞ்சமாக வாங்கியிருக்கிறேன்.சூதாட்டக்காரர்கள் என்னிடம் வந்து பேசி ஆசை காட்டியதால் குழப்ப மனநிலையில்லஞ்சம் வாங்கிக் கொள்ள நான் தூண்டப்பட்டேன் என்பதே உண்மை.லஞ்சம் கொடுக்க சூதாட்டக்காரர்கள் முன் வந்தபோது அவர்களை திட்டிஅனுப்பியிருக்கலாமோ என்று இப்போது நான் கருதுகிறேன். ஆனால், அப்போது நான்அவ்வாறு செய்யவில்லை. அப்போது நான் மறுத்திருந்தால் இப்போது எனக்கு இந்தநிலை வந்திருக்காது.சூதாட்டக்காரர்களிடமிருந்து பணம் வாங்கியது உண்மை. ஆனால், மேட்ச் பிக்ஸிங்கில்ஒருபோதும் நான் ஈடுபடவில்லை. 1995-ம் ஆண்டு முதல் இதுநாள் வரைகிளிஃப்போர்டு கிரீன் என்ற ஏஜெண்டு மூலம் ஸ்பான்சர்ஷிப் மற்றும்என்டார்ஸ்மென்டுகளுக்காக மட்டும்தான் நான் பணம் பெற்றேன்.1996-ம் ஆண்டு, இந்தியாவில் முகேஷ் குப்தா என்பவரை அசாருதீன் ஒரு ஹோட்டல்அறையில் எனக்கு அறிமுகப்படுத்தினார். முதலில் தன்னை அவர் ஒரு நகைக்கடைஉரிமையாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆனால், பின்னர்தான் அவர்மேட்ச் பிக்ஸிங் செய்யும் சூதாட்டக்காரர் என்று தெரிந்தது.தென் ஆப்பிரிக்க அணியைச் சேர்ந்த ஒரு வீரருக்காக முகேஷ் குப்தாவிடம் பணம்வாங்கிக் கொண்டு என்னால் முடிந்ததைச் செய்வதாகக் கூறினேன். அதுதான் நான்செய்த பெரிய தவறு. பணம் வாங்கியது பற்றி அணி வீரர்கள் யாரிடமும்தெரிவிக்கவில்லை. பணத்தை நானே வைத்துக் கொண்டேன். அந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா தோற்றுவிட்டது.அந்த ஆண்டின் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணிசுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போதும் தென் ஆப்பிரிக்கா வந்த முகேஷ் குப்தாடர்பன் மற்றும் கேப் டவுனில் போட்டிகள் தொடங்கப்படுவதற்கு முன் அப் போட்டிதொடர்பான தகவல்களைப் கேட்டார் என்றார் குரோனியே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications