தமிழகத்தில் இன்று
ஜெ-சசி கோர்ட்-டில் ஆஜர்: ஏ.ஆர்.ரஹ்மான் -நாளை சாட்சி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
அதிமுக ஆட்சிக் கால ஊழல்களை விசாரித்து வரும் மூன்றாவது தனி நீதிமன்றத்தில் டான்சி நிலபேர வழக்கிற்காக ஜெயலலிதாவும், சசிகலாவும்வெள்ளிக் கிழமை ஆஜராகின்றனர். அதே நாளில் முதலாவது தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சாட்சிசொல்வதற்காக இளம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆஜராகிறார்.
அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை ஆட்சியில் இருந்தபோது அடிமாட்டு விலைக்கு வாங்கினார் ஜெயலலிதா. இதனால் அரசுக்கு 4.15 கோடி ரூபாய்இழப்பு ஏற்படுத்தியதாக ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 6 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை மூன்றாவது தனி நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இவ்வழக்கில் வெள்ளிக் கிழமை பகல் 12 மணிக்கு ஆஜராகி வாக்குலம் அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா, சசிகலாவுக்கு நீதிபதி அன்பழகன்ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். ஆனால், பகல் 12 மணிக்கு பதிலாக 2 மணிக்கு ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா, சசிகலா தரப்புவக்கீல்கள் நீதிபதியிடம் முறையிட்டனர்.
அதை அவர் நிராகரித்ததோடு, கண்டிப்பாக பகல் 12ம் மணிக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாார்.
அதன்படி வெள்ளிக் கிழமை பகல் 12 மணிக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் மூன்றாவது தனி நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர்.
அதே நேரத்தில் முதலாவது தனி நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கில் சாட்சி செல்வதற்காக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்,மாண்டலின் சீனிவாஸ் ஆகியோர் ஆஜராகி சாட்சியம் அளிக்கின்றனர்.
ஆட்சியில் இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66.5 கோடிக்கு சொத்துக்கள் வாங்கியதாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்ஆகியோர் மீது ஊழல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கை நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் விசாரித்து வருகிறார். தற்போது இவ்வழக்கில் முன்னாள் வளர்ப்பு மகன் திருமணத்திற்குஜெயலலிதா, சசிகலா செய்த செலவு விவரங்கள் பற்றி நீதிபதி விசாரித்து வருகிறார்.
அதுதொடர்பாக சாட்சியம் அளிக்கும்படி கல்யாணத்திற்கு பந்தல் போட்டவரிலிருந்து, பாட்டு பாடியவர்கள் வரை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சுதாகரன் திருமண வரவேற்பு நகழ்ச்சியில் இசைக் கச்சேரி நடத்தியவர்கள் என்ற முறையில் ஏ.ஆர்.ரகுமானும், மாண்டலின் சீனிவாசும் இன்று சாட்சியம்அளிக்கின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications