கிரிக்கெட் டெஸ்ட்: இலங்கையை சூறை-யா-டி-ய-து பாகிஸ்தான்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கல்லே:
கல்லேயில் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 163வித்தியாசத்தில் இலங்கை தோல்வியடைந்தது.
இதன் மூலம் 3 டெஸ்டுகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றுள்ளது. இந்த வெற்றியைஅடுத்து தனது நாட்டில் இலங்கைக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில்இழந்ததற்குப் பாகிஸ்தான் பழி தீர்த்துள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 600 ரன்கள் என்ற நிலையில் டிக்ளேர்செய்தது. இதையடுத்து 419 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை சனிக்கிழமை காலைஇலங்கை தொடங்கியது.
முதல் இன்னிங்ஸைப் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் இலங்கை வீரர்கள் சரியாக ஆடவில்லை.பாகிஸ்தான் அணி வீரர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். இலங்கை அணியில் அட்டபட்டுவும், அர்ஜுனரணதுங்காவும் ஓரளவு நின்று ஆடி அரை சதங்கள் அடித்தனர்.
அட்டபட்டு 59 ரன்களும், ரணதுங்கா 65 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இலங்கை அணி 256 ரன்களுக்குஆட்டமிழந்தது. இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 163 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியில் வக்கார் யூனிஸ் சிறப்பாகப் பந்து வீசி 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் புதன்கிழமை கண்டியில்துவங்குகிறது.












Click it and Unblock the Notifications