For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

மன ஒருமைப்பாடே கர்ம யோகியின் வெற்றி ரகசியம் என்றேன். இந்த மன ஒருமைப்பாடு சுலபமா? எப்படி வரும்என்று சந்தேகப்பட்டு கிருஷ்ணனைக் கேட்கிறான் அருச்சுனன். அப்பியாசம் அதாவது பயிற்சி ஒன்றே வழிஎன்கிறார் கண்ணன்.

பளு தூக்கும்போது ஒரே நாளில் அத்தனை பாரமும் தூக்கிவிட முடியுமா? முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகப்பாரத்தைக் கூட்டிக் கூட்டி, நேரத்தை அதிகரித்து அதிகரித்து நிறைய சுமக்கிறார்கள். போட்டிகளில் வெற்றிபெறுகிறார்கள், ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கியவர் அதற்கு முன் எத்தனை நாள் முயற்சி செய்தார்என்பது யாருக்குத் தெரியும்?

மேடையில் இலட்சக்கணக்கான ரசிகர்களைக் கவரும் பாடகர்கள் எத்தனை ஆண்டு பாடிப் பாடிப் பழகிஇருக்கிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்? ஓயாத பயிற்சி, சாயாத முயற்சி இவையே யோகியின் ஏணிப்படிகள்.இசை மேதை பித்தோவன் பற்றி ஒரு நிகழ்ச்சி சொல்கிறேன்.

பித்தோவன் ஒரு நாள் அருமையாகக் கச்சேரி செய்து கொண்டிருந்தார். பியானோவில் அவர் கை நர்த்தனம்ஆடியது. கச்சேரி முடிந்ததும் ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு பாராட்டினர். கைகளை முத்தமிட்டனர்.பித்தோவன் வாசிப்பில் பிரமித்துப் போன பெண்மணி ஒருத்தி அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு புகழஆரம்பித்தார்.

""நீங்கள் பெரும் பாக்கியம் செய்தவர். உங்கள் கை பியானோவில் எப்படி விளையாடுகிறது. கடவுள் உங்களுக்குபிரத்யேகமாக அருள் புரிந்திருக்கிறார். நிறையவே கடவுள் அருள் உமக்கு"" என்று புகழ்ந்து தள்ளினார்.

பொறுமையாக கேட்டுக் கொண்ட பித்தோவன் ""அம்மணி.. இது கடவுள் எனக்கு கொடுத்த சிறப்பு வரம் அல்ல..நாள் தோறும் எட்டு மணி நேரம் நாற்பது ஆண்டுகள் நீங்களும் வாசித்துப் பழகினால் என்னைப் போல நீங்களும்வாசிக்கலாம்.. இது நான் மட்டும் நிகழ்த்தக் கூடிய சாதனை அல்ல என்றார். உண்மை. விடா முயற்சி, சீரிய பயிற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும் என்பதை கர்ம யோகிகள் உணர வேண்டும்.

பித்தோவானை முட்டாளாக்க நினைக்கும் பக்திமான்கள், ஒரு கேள்வி கேட்டு மகிழ்வார்கள்.""நாற்பது ஆண்டுகள்முயற்சியும், பயிற்சியும் வெற்றி தரும்.. நாற்பது ஆண்டு உயிரோடு இருப்பது கடவுள் தரும் வரமல்லவா?இடையில் மரணம் வந்து விட்டால்.. எல்லாமே வீண்தானே?"" என்பார்கள்.

இந்தக் கேள்விக்குக் கீதை தரும் விடை உன்னதமானது. முயற்சியில் தோல்வி நேர்ந்தாலும், இடையில் மரணம்வந்தாலும் வருந்த வேண்டியதில்லை. காரணம் அடுத்த பிறவியில் எடுத்த எடுப்பிலேயே இந்த முயற்சி வெற்றிதரும். பழைய முயற்சியின் அளவு வெற்றிக்குக் கணக்கில் கொள்ளப்படும். காரணம்.. மரணம் இடைக்காலமானது.எனவே இப்போது சேகரித்த சேமிப்பு அடுத்த பிறவியின் தொடக்கத்தில் கணக்கில் வரும் என்று கீதை உத்தரவாதம்தருகிறது. எனவே முயற்சியும், பயிற்சியும் ஒரு போதும் விடக்கூடியவை அல்ல.

மேலும் மன ஒருமைப்பாடு இருக்குமானால் முதுமை என்பது மனிதனைத் தாக்காது. திறமை குறையாது.மனிதனுக்கு வயது ஏற ஏற முதுமை கூடக்கூட அவன் மனம் உறுதியடைய வேண்டும். உதாரணமாக பழம் முதுமைபெற்று வெளியே அழுக அழுக உள்ளே விதை கெட்டிப்படுகிறது அல்லவா.. அது போல உடம்பு தளரத் தளரஆன்மாவில் மன ம் கெட்டிப்பட வேண்டும். ஆன்மாவில் மனம் உறுதிப்பட வேண்டும்.

சஞ்சலம், கவனம் மனத்தில் இருந்தால் கெட்டிப்பட முடியாது! கெட்டிப்படுதலே மன ஒருமைப்பாடு. சுழன்றுகொண்டே இருக்கும் மனச் சக்கரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். அப்போது சித்தம் ஒருமுனைப்படும். மனச்சக்கரத்தின் சுழற்சியை நிறுத்த என்ன வழி? அதற்கு ஒரே வழி வரம்பான வாழ்க்கை முறை.

உண்ணுவதில், உடுத்துவதில், உலவுவதில், இன்ப நுகர்ச்சியில் எல்லை வகுத்துக் கொள்ளாவிடில் மனம் ஒருமைஅடையாது. அலைபாய்ந்து கொண்டே இருக்கும். எனவே வாழ்க்கையை ஒரு வரம்புக்குள் கொண்டு வரப் பழகவேண்டும். நமது தேவைகள் பெருகப் பெருக வரம்புகள் கரைகின்றன. நிம்மதி அழிகிறது. எப்போதும் ஓர்எதிர்பார்ப்பு, ஏக்கம் நம்மைத் தின்னத் தொடங்குகிறது. எனவே எதற்கும் எல்லை வகுப்பது மிக மிக அவசியம்.

ஒரு காலத்தில் இந்தியாவில் தொலைக்காட்சியே இல்லாமல் இருந்தது. தூர்தர்ஷன் மட்டும் வந்தது. பிறகு தனியார்தொலைக் காட்சிகள் தொடங்கப்பட்டன. சாட்டிலைட்டுகள் மூலம் இப்போது நூற்றுக் கணக்கில் சேனல்கள் வந்துவிட்டன. மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டே இருந்தால் திருப்தி வருமா? வராது. பரபரப்பும் வருத்தமும்தான்மிகும். இதைப் பார்க்கும் போது அதைப் பார்க்கவில்லையே என்று வருந்துவது தவிர்க்க முடியாததாகிவிடும்.ஒன்றை முழுமையாகப் பார்க்கவும் முடியாது. மாற்றி மாற்றி பார்த்தாலும் முழுமை கிடைக்காது. இவை யாவும்வாழ்வின் தேவைகளுக்கு வரம்பு கிட்டாதவர்களின் துயரங்கள்.

எத்தனை ஆடைகள் இருந்தும் வெளியில் போகும்போது எதுவும் திருப்தியாக இல்லை ! எத்தனை கார்கள்,எத்தனை வீடுகள் வந்தாலும் - வாங்க வேண்டியவை பட்டியலில் பாக்கி இருந்து கொண்டே இருக்கிறது. இவற்றைவரம்புக்குள் கொண்டு வராவிட்டால் மனம் எப்படி சாந்தி அடையும்? எனவே எல்லா விஷயத்துக்கும் ஓர் எல்லைவகுத்துக் கொள்வது நல்லது.

எனவே ஓர் உண்மையான யோகி உணவு, உறக்கம் எல்லாவற்றிலும் ஓர் அளவு வைத்திருப்பதால் பூரணதிருப்தியுடன் வாழுகிறான். எல்லை வகுத்துக் கொள்ளாதவன் நிலை என்ன?

(பிறகு சொல்கிறேன்)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X