தமிழகத்தில் இன்று
ஆண்கள் வாழச் சிறந்த இடம் கனடா; பெண்களுக்கு ஸ்கான்டிநேவியன் நாடுகள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஐக்கிய நாடுகள்:
வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமா? ஆண்களே கனடாவுக்குச் செல்லுங்கள்.பெண்கள் வாழச் சிறந்த இடம் ஸ்கான்டிநேவியன் நாடுகள் என்று ஐக்கிய நாடுகளின்2000-ம் ஆண்டின் மனித வள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கனடாவுக்கு அடுத்து இரண்டாம் இடம் பெறுவது நார்வே நாடு. அதன் பிறகுஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, ஸ்வீடன், பெல்ஜியம், ஹாலந்து, ஜப்பான்,பிரிட்டன், பின்லாந்து என்ற பட்டியல் நீள்கிறது.
உள் நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சியாரா லியோன், நைஜர், பர்கின பாஸோ,எத்தியோப்பியா, புரூண்டி போன்ற நாடுகள் பட்டியலில் கடைசி இடங்களைப்பெற்றுள்ளன.
ஒரு நாட்டின் வருமானம், சுகாதார வசதி, வாழ்நாள் சராசரி, கல்வி வசதி ஆகியவற்றைவைத்து ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 174 நாடுகளும்பட்டியலிடப்பட்டுள்ளன.
கடந்த 7 ஆண்டுகளாக பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தைக் கனடா நாடு பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
பெண்களைப் பொறுத்தவரை அவர் வாழ சிறந்த நாடுகளாக நார்வே, பின்லாந்து,ஸ்வீடன் ஆகிய ஸ்கான்டிநேவியன் நாடுகள் கருதப்படுகின்றன.
முதலிடம் பெறும் நார்வேயைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, ஸ்வீடன், டென்மார்க்,பின்லாந்து, ஜெர்மனி, ஹாலந்து என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்கள் பிரிவில்முதலிடம் பெற்றுள்ள கனடா, பெண்கள் பிரிவில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இரு பிரிவிலும் இந்தியாவுக்கு குறிப்பிடும்படியான இடம் கிடைக்கவில்லை என்றுகுறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த தேசிய உற்பத்தி மற்றும் வறுமைக் கோட்டின் சதவீதம் ஆகியவற்றைவைத்து 18 பணக்கார நாடுகளை வரிசைப்படுத்தியதில் அமெரிக்காவுக்கு முதலிடம்கிடைத்துள்ளது.
இரண்டாம் இடம் அயர்லாந்துக்கும், மூன்றாவது இடம் பிரிட்டனுக்கும் கிடைத்துள்ளது.

-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications