தமிழகத்தில் இன்று
கடலூரில் பாட்டா-ளி மக்கள் கட்சி அலுவலகத்திற்கு தீவைப்பு
கடலூர்:
சிதம்பரம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்திற்கு தீவைக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில்ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் இயகத்தினருக்கும் வன்னியர்களுக்கும் இடையே கடந்த 23-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்தமோதல் வன்முறையாகி வீடுகளுக்கு தீவைப்பு , மோட்டார் கொட்டகைகள் எரிப்பு பஸ் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. இதனால் இருவகுப்பினருக்கும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 27 -ம் தேதி வன்முறை குறைந்து அமைதி ஏற்பட்டது. நேற்று மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் நகர பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகம் கீற்று கொட்டகையில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தஅலுவலகத்தை வன்முறை கும்பல் ஒன்று தீவைத்து கொளுத்தியது. இதில் அலுவலகம் சாம்பலானது. அப்பொழுது அருகே உள்ள பாஸ்கரன் என்பவருடையவிறகு கடையும் எரிந்து சாம்பலானது. இதில் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
பா.ம.க அலுவலகம் எரிக்கப்பட்டதை கண்டித்து அந்த பகுதியில் பொதுமக்கள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பஸ் போக்குவரத்துமாற்றி விடப்பட்டது. அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் அங்கே கலவரத் தீ அடங்கவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications