தமிழகத்தில் இன்று
அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை
கரூர்:
கரூரில் அ.தி.மு.க கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கரூர் தான்தோணி பேரூராட்சியின் பதினைந்தாவது வார்டுகவுன்சிலராக இருந்தவர் எம்.பி.ஆறுமுகம். இவர் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர். தான்தோணி அ.தி.மு.க டவுண் பஞ்சாயத்துமுன்னாள் செயலாளராக இருந்தவர்.
சுக்காலியூர் முத்துக்கவுண்டன் புதூரில் ஆறுமுகம் வசித்து வந்தார்.கரூர் பஸ் நிலையம் எதிரில் உள்ள தெற்கு முருகநாதபுரத்தில்சைக்கிள் கடை நடத்தி வந்தார்.
திங்கள்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் கடையைமூடிவிட்டு வீட்டிற்கு செல்ல ஈஸ்வரன் கோயில் பின்புறம் உள்ளவாட்டர் டாங்க் அருகில் உள்ள பாதை வழியாக மொபட்டில்சென்றார்.
அப்பொழுது அங்கு மறைந்திருந்த சிலர் அவரை அரிவாளால்வெட்டிக் கொன்றனர். அவரது கழுத்தின் இருபுறம், கை, மார்பு,ஆகிய பகுதிகளிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பலியானார்.
தகவல் அறிந்த கரூர் டி.எஸ்.பி ராமச்சந்திரன் உட்பட போலீஸ்அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆறுமுகத்தைவெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.
இறந்த ஆறுமுகத்திற்கு அருக்காணி என்ற மனைவியும், உமா,சுகன்யா, சுதா என்ற மூன்று பெண்களும் நவீன் என்ற மகனும்உள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications