தமிழகத்தில் இன்று
ஜம்மு-காஷ்மீர் சுயாட்சி தீர்மானத்தை நிராகரித்தது மத்திய அரசு
டெல்லி:
ஜம்மு- காஷ்மீர் சட்டசபையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட சுயாட்சி தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கவேண்டும் என்பது தொடர்பான தீர்மானம் அம் மாநில சட்டப்பேரவையில் ஜூன் 26-ம்தேதி நிறைவேற்றப்பட்டது. பின்னர் மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அத் தீர்மானம் அனுப்பப்பட்டது.
இதையடுத்து சுயாட்சி தீர்மானம் குறித்து மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை கூடி விவாதித்தது. பிரதமர் வாஜ்பாய் தலைமையில் சுமார் ஒன்றரை மணிநேரம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
விவாதத்துக்குப் பிறகு காஷ்மீர் சுயாட்சி தீர்மானத்தை நிராகரிப்பது என அமைச்சரவை முடிவு செய்தது. இத் தகவலை, கூட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்றவிவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் தெரிவித்தார்.
இம் முடிவு தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சுயாட்சி தீர்மானத்தை நிராகரிப்பதுஎன்று ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது. அதே நேரத்தில் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில்முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக மகாஜன் தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி நிருபர்களிடம் பின்னர்தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டம் துவங்குவதற்கு 15 நிமிடம் முன்பு, பிரதமர் வாஜ்பாயை அவரது வீட்டில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா சந்தித்துப்பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications