தமிழகத்தில் இன்று
இந்தியா வாங்கும் ஏவுகனை பொருத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்
டெல்லி:
ரஷியாவில் கட்டப்பட்டு வரும் ஏவுகனை பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜூலை 16-ம் தேதி துவக்கி வைக்கப்படுகிறது.
இதற்காக இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுஷில் குமார் ரஷியா செல்லவுள்ளார்.ஐ.என்.எஸ். சிந்துசாஸ்திரா என்று இந்தக் கப்பலுக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த நீர் மூழ்கிக் கப்பலில் கிளப் எஸ் வகை ஏவுகனை வசதி செய்யப்பட்டுள்ளது.செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஜூலை 16-ம் தேதி இதை சுஷில் குமார் துவக்கிவைக்கிறார். முன்னதாக அவர் இங்கிலாந்திற்கும் செல்கிறார்.
ஜூலை 9-ம் தேதி முதல் சுஷில் குமார் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான கூட்டு நடவடிக்கை குறித்துஇங்கிலாந்து கடற்படை தளபதிகளிடம் சுஷில் குமார் பேசுவார் என்றுதெரிகிறது.
இந்தியா வாங்கவுள்ள சிந்துசாஸ்திரா நீர்மூழ்கிக் கப்பல், இந்தியாவின் 10-வது கிலோவகை நீர் மூழ்கியாகும். இருப்பினும் ஏவுகனை வசதி கொண்ட முதல் நீர் மூழ்கிக்கப்பலாகும் இது.
இந்த நீர் மூழ்கிக் கப்பலில் கிளப் வகை ஏவுகனைகள் பொருத்தப்படுகின்றன. இதன்மூலம், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், நீண்ட தூர இலக்குகள் ஆகியவற்றை தாக்கமுடியும். இந்த ஏவுகனைகளின் இலக்கு தூரம் 300 கிலோமீட்டர் ஆகும். 76 முதல் 400கிலோ வரையிலான வெடிபொருட்களை இதில் பொருத்த முடியும்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இந்தியாவின் கடற் படை பலம் அதிகரித்திருக்கிறது.
இந்தியாவிடம் ஏற்கனவே உள்ள இரண்டு கிலோ வகை நீர் மூழ்கிக் கப்பல்களானஐ.என்.எஸ்.சிந்துகோஷ், ஐ.என்.எஸ்.சிந்துவீர் ஆகிய இரு கப்பல்களும் கடந்த இருவருடங்களாக பழுது பார்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்று ரஷியாவில் பழுதுபார்க்கப்படுகிறது.
மும்பையில் பிரெஞ்சு கடற்படைக் கப்பல்:
இதற்கிடையே, பிரெஞ்சு நாட்டுக் கடற்படைக் கப்பலான நிவோஸ் மற்றும் சப்ளைகப்பலான வார் ஆகிய இரு கப்பல்களும் திங்கள்கிழமை மும்பை துறைமுகம் வந்தன.
இரு நாட்டு நல்லுறவைப் பலப்படுத்தும் வகையில் இக்கப்பல்கள் மும்பை வந்துள்ளன.வியாழக்கிழமை அவை மும்பையை விட்டுப் புறப்படும். கடந்த சில மாதங்களில்இந்தியாவுக்கு வரும் இரண்டாவது பிரெஞ்சுக் கப்பல் இது. இந்த ஆண்டுத் துவக்கத்தில்பிரெஞ்சுக் கடற் படையின் அதிரடிப்பிரிவு கப்பல் இந்தியா வந்தது. அதன் பின்னர்அரபிக் கடலில் இந்திய கடற்படையுடன் சேர்ந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications