தமிழகத்தில் இன்று
சாப்ட்வேர் ஏற்றுமதியில் ஆந்திரா அதிரடி சாதனை
ஹைதராபாத்:
சாப்ட்வேர் ஏற்றுமதியில் ஆந்திர மாநிலம் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்யஅந் மாநிலம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது தொடர்பாக, ஹைதராபாத் சாப்ட்வேர் ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலர் மல்லிகார்ஜுன் ராவ் கூறியதாவது:
தகவல் தொழில்நுட்பத் துறையில் சமீபத்தில் தான் ஆந்திரா நுழைந்தது. இப்போது வெளிநாடுகளுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்வதில் ஆந்திர மாநிலம்முன்னணியில் உள்ளது.
நடப்பு நிதியாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்யப்படும் என்று கருதப்படுகிறது. தேசிய அளவில் சாப்ட்வேர் ஏற்றுமதி 50சதவீதத்திலிருந்து 68 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் 100 சதவீத வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இது வரும்ஆண்டுகளிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சாப்ட்வேரில் 65 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது. ஹைதராபாத்தில்தற்போது 900 சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளன. மொத்தம் 25 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். மாதந்தோறும் நூற்றுக்கணக்கானசாப்ட்வேர் நிறுவனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1991-92-ல் ரூ.2 லட்சமாக இருந்த சாப்ட்வேர் ஏற்றுமதி, 1999-2000-த்தில் ரூ.1,069 கோடியாக உயர்ந்தது. நடப்பு ஆண்டில் இது ரூ.2 ஆயிரம்கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறைக்கு சந்திரபாபு நாயுடு அரசு மிகுந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.பல புதிய திட்டங்கள் தீட்டப்படுகின்றன. தகவல்தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஆந்திர அரசு செய்து தருகிறது என்றார் மல்லிகார்ஜுன ராவ்.
-
தூத்துக்குடிக்கு வர இருந்த கப்பல் முதலீடு! கண்டுக்காத தமிழக அரசால்..ஆந்திரா போன மசகான் டாக் நிறுவனம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications