பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
தொடரும் துப்பாக்கிச் சண்டை:
பிஜி நாடாளுமன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு
சுவா:
பிஜியில் ராணுவத்தினருக்கும் புரட்சிப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்தது. இதையடுத்து பிணைக் கைதிகளுடன் புரட்சிப் படையினர்தங்கியுள்ள நாடாளுமன்ற கட்டத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிஜியில் கடந்த மே 19-ம் தேதி புரட்சிஏற்பட்டது. பிஜி தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த புரட்சிப் படையினர்,பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட பலரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர்.
அதன் பிறகு பிஜியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ராணுவத்தின் கையில் ஆட்சி வந்தது. ராணுவத்துக்கும், புரட்சிப்படையினருக்கும் இடையே நடந்தபேச்சுவார்த்தையில் பிணைக் கைதிகளில் சிலர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட 27 பேர் இன்னும் பிணைக் கைதிகளாகஉள்ளனர்.
பிஜியில் பிஜி நாட்டவர்களைக் கொண்ட அரசு அமைக்கப்படும் வரை பிணைக் கைதிகளை விடுவிக்கமாட்டோம் என்று புரட்சிப் படையினர்அறிவித்துவிட்டனர். இந் நிலையில், பிஜியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை அடுத்து அடுத்த இரு ஆண்டுகளக்கு தனது ஆட்சி தொடரும் என்று ராணுவம்அறிவித்தது.
தவிர, விரைவில் இந்தியர்களைக் கொண்ட இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று அறிவித்து, அதன்படி பிஜி நாட்டவரான லெய்சேனியா கராசேபிரதமராக செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். அவர் தனது அமைச்சரவையில் இந்தியர்கள் யாரும் இடம் பெறமாட்டார்கள் என்றுஅறிவித்துள்ளார்.
இந் நிலையில், புதிய பிரதமராக கராசே பதவியேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு நாடாளுமன்ற வளாகத்துக்குள் புரட்சிப் படையினருக்கும்,ராணுவத்தினருக்கும் இடையே சுமார் கால் மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதையடுத்து நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர்ஹோவர்டு போலிடினி தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புக்கு இருந்த ராணுவ வீரர்கள் இருவர், புரட்சிப்படையினர் தங்கியுள்ள இடத்துக்கு மிக அருகில் சென்றனர். இதைப் பார்த்துபுரட்சிப் படையினர் சந்தேகத்தின்பேரில் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு ராணுவத்தினரும் சுட நேரிட்டது என்றார் போலிடினி.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications