பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
கொழும்புத்துறை, நாகர்கோவிலை பிடித்தது ராணுவம்; 50 புலிகள் பலி
கொழும்பு:
யாழ்ப்பாண தீபகற்பத்தில் கொழும்புத்துறை, நாகர்கோவிலை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுள்ளதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது. அப்போது நடந்தசண்டையில் விடுதலைப் புலிகள் 50 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பலிதா பெர்னான்டோ புதன்கிழமை கூறியதாவது:
இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகளின் நிலைகள் மீது தாக்குதல்நடத்தி ராணுவத்தினர் முன்னேறி வருகின்றனர்.
நாகர்கோயில் மற்றும் கொழும்புத் துறை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடந்த சண்டையில் புலிகளின் நிலைகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் 50-க்கும் மேற்பட்ட புலிகள் பலியானார்கள். புலிகளின் நிலைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டன.
யாழ்ப்பாண நகருக்கு 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப் பகுதிகளை ராணுவம் பிடித்துள்ளது. தற்போது அங்கு தங்களது நிலையை உறுதிப்படுத்திக்கொள்ளும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்றார் பெர்னான்டோ.
தாக்குதல் நடந்த இடத்திலிருந்து 23 புலிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் படையினர் மீது புலிகள் தாக்குதல் நடத்துவதால் மீட்புப் பணிபாதிக்கப்பட்டுள்ளது என்று தலைமை சென்சார் அதிகாரி ஆரிய ரூபசிங்கே தெரிவித்தார்.
புலிகளுடன் நடந்த சண்டையில் 2 ராணுவத்தினர் இறந்துவிட்டதாகவும், 37 பேர் காயமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
நாகர்கோயில் மற்றும் கொழும்புத்துறையில் நடந்த சண்டை குறித்து புலிகள் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லை.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications