தமிழகத்தில் இன்று
பெட்ரோல் கலப்படத்தைத் தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
டெல்லி:
பெட்ரோலியப் பொருட்களில் கலப்படத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச அரசுகளையும் மத்திய அரசுகேட்டுக் கொண்டுள்ளது.
நாப்தா மீதான கட்டுப்பாடு, பெட்ரோலில் கலப்படத்தைத் தடுக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்த உத்தரவுகளைஅமல்படுத்துவது குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவுத் துறை அமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்தும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கைஎரிவாயுத் துறை அமைச்சர் ராம் நாயக், நிருபர்களிடம் கூறியதாவது:
பெட்ரோலியப் பொருட்களில் கலப்படத்தைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்களில்கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களும் வரவேற்றுள்ளன. மேலும், இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்தும்படி மாநில அரசுகளும், யூனியன்பிரதேச அரசுகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
1999, ஜனவரி முதல் தேதி வரை சமையல் எரிவாயு இணைப்புக் கேட்டுக் காத்திருப்பவர்களுக்கு நடப்பு ஆண்டின் இறுதிக்குள் இணைப்புத் தரப்பட்டுவிடும்.
மக்களுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லாமல் சமையல் எரிவாயு கிடைக்க, எரிவாயு சிலிண்டர்களை இருப்பில் வைத்துக் கொள்ள போதுமானகிடங்குகளைக் கட்ட வசதி செய்து தரும்படி அனைத்து மாநிலங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
அது தவிர, புதிய ஏஜென்சிகளை திறக்கும்படியும் மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்றார் ராம் நாயக்.
யு.என்.ஐ.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications