டொரன்டோ தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா ரெடி
துபாய்:
கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில்விளையாட இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.
டொரான்டோ தொடரில் இந்தியா நிச்சயம் விளையாடும். போட்டியில் தனது பங்கேற்பு குறித்து போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு விரைவில் தகவல்தெரிவிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் லேலே தெரிவித்தார். கல்ஃப் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்அவர் இதைத் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிராக டொரன்டோ தொடரில் விளையாட பாகிஸ்தான் ஏற்கெனவே சம்மதம் தெரிவித்துள்ளது. செப்டம் 9 முதல் 17 வரை இந்தஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் தனது சம்மதம் தெரிவித்த பிறகும் இந்தியா தனது சம்மதத்தைத் தெரிவிக்காமல்இருந்ததை அடுத்து போட்டி ஏற்பாட்டாளர்கள் கவலை அடைந்தனர்.
கார்கில் போருக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதில்லை என்று இந்தியா முடிவு செய்திருந்ததே இதற்குக்காரணம். கார்கில் போருக்குப் பிறகு நடந்த டொரான்டோ போட்டியில் கூட இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாக மோதிக் கொள்ளவில்லை.மூன்றாவது நாடாக மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இரு அணிகளும் தலா 3 ஆட்டங்களில் விளையாடின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு டொரான்டோ தொடரில் இந்தியா பங்கேற்காத பட்சத்தில் கிரிக்கெட் விளையாடும் வேறு நாட்டு அணியை அழைத்து போட்டியை நடத்துவதுஎன்று அவர்கள் முடிவு செய்திருந்தனர். இந் நிலையில், இந்தியா தனது சம்மதத்தைச் சமீபத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பகைமையை மறந்து சேர்ந்து விளையாடுவது என்றுஎடுத்த முடிவை அடுத்து இந்தியா தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications