தமிழகத்தில் இன்று
சின்னத் தம்பி தெருவில் பெரிய பெரிய கொள்ளைகள்
சென்னை:
இது மக்கள் நடமாடும் தெருவா அல்லது கொள்ளைக் கூடாரமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்வகையில் சென்னையில் கொள்ளையர்கள் நடமாட்டத்திற்கென்றே ஒரு இடம் இருக்கிறது. அதற்குபெயர் சின்னத்தம்பித் தெரு.
இந்த தெருவில் சமீபத்தில் மட்டும் மூன்று கொள்ளையடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. வெள்ளிக்கிழமை நடந்த மூன்றாவது சம்பவத்தில் 9 லட்ச ரூபாயை கொள்ளையர்கள் கத்தி முனையில்கொள்ளையடித்துள்ளனர்.
இந்த கொள்ளையர் தெரு வேறு எங்கும் மூலை முடுக்கில் ஆள் அறவே இல்லாத பகுதியில்உள்ளதல்ல. பரபரப்பான சென்னை பாரிமுனைப் பகுதியில்தான் அமைந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் வசூலாகும் பணத்தை வங்கியில் செலுத்துவதற்கு ஊழியர்கள்கொண்டு செல்லும் நேரத்தில் தான் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு வருகின்றன. 6 மாதத்திற்கு முன்புஇந்த சின்னத்தம்பித் தெரு வழியாக பணம் எடுத்துச் சென்ற வியாபாரி தாக்கப்பட்டு 13 லட்ச ரூபாய்கொள்ளை அடிக்கப்பட்டது.
ஓரிரு மாதங்களில் இரண்டாவது சம்பவத்தில் 3 லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இப்போதுமூன்றாவது சம்பவம், கொள்ளை அடிக்கப்பட்ட பணம் 9 லட்சம்.
பாரிமுனை பகுதியில் ஆச்சாரப்பன்தெருவும், சின்னத்தம்பி தெருவும் அருகருகே அமைந்துள்ள தெருக்கள்.ஆச்சாரப்பன் தெருவில் உள்ள ஆதித்தியன் டிரேடர்ஸ் மற்றும் ஆதித்தியன் அன்ட் கோ என்ற இரண்டுநிறுவனங்கள் உள்ளன.
இந்நிறுவனத்தில் வசூலான பணம், இரண்டு பைகளில் அடைத்து இரண்டு ஊழியர்கள் ஒருவர் பெயர்சீதாராமன், இன்னொருவர் பெயர் ஜெயராஜ் ஆகிய இருவரிடமும் வங்கியில் செலுத்தும்படிகொடுத்தனுப்பினர். ஒரு பையில் 5.50 லட்ச ரூபாய் பணம், இன்னொரு பையில் 3.35 லட்ச ரூபாய் பணம்இருந்தது.
இந்த பணப் பைகளை எடுத்துக் கொண்டு இருவரும் சின்னத்தம்பித் தெரு வழியாக வங்கிக்கு சென்றனர்.இந்த தெரு வழியாக தான் சென்றாக வேண்டும். அப்போது 8 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல்இவர்ளை வழி மறித்தது. பணப் பைகளை பறிக்க முயன்றது. ஆனால், இருவரும் எதிர்த்துப் போராடினர்.
ஆத்திரமடைந்த கும்பல், அரிவாளால் சீதாராமனை வெட்டியது. உருட்டுக் கட்டையால் ஜெயராஜைதாக்கியது. இருவரும் சுருண்டு விழ பணப் பையுடன் கொள்ளைக் கும்பல் 2 ஆட்டோக்களில் ஏறிசாவகாசமாக தப்பிச் சென்றது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications