For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பயமுறுத்தும் நாமக்கல் ... எய்ட்ஸ் நோய்க்கு 14 பேர் பலி

சென்னை:

எய்ட்ஸ் பற்றிய விளம்பரங்கள், விழிப்புணர்வு கூட்டங்கள் என்று ஏகப்பட்ட தடபுடல்கள் ஒரு புறம்தொடர இன்னொருபுறம் மிக சைலண்டாக இந்த அரக்கன் வளர்ந்து கொண்டிருப்பது வேதனையானது.

இந்தியாவில் நகரங்களைவிட, கிராமப்புறங்களில் தான் இந்த அரக்கனின் ஆதிக்கம் மிக அதிகம்என்கிறார்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு இயக்கத்தினர். தமிழகத்தில் நாமக்கல் இந்த எய்ட்ஸ் அரக்கனின்பிடியில் இருப்பது கொடூரம்.

கடந்த ஆறு மாதங்களில் கிட்டதட்ட பதினான்கு பேர்வரை இந்த கொடூரனுக்கு பலியாகியிருப்பதுஅதிர்ச்சிகரமானது. நாமக்கல் மாவட்டத்தின் பொருளாதார ஆணி வேராக இருப்பது லாரிப்போக்குவரத்து.

ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் சரக்கு ஏற்றுமதி இறக்குமதி என்று வந்து செல்வதுபொருளாதாரத்துக்கு பெருமையான விஷயம் என்றால் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும்வருகின்ற லாரி ஒட்டுநர்கள், உதவியாளர்கள் பல நாட்கள் பயணம் செய்து வருகின்ற வழியில் தன்னுடையஆசாபாசங்களை தீர்த்துக்கொள்வதற்காக வழியில் விலை மாதர்களிடம் சென்று விடுவதால் இந்தபிரச்சனைகள் என்கிறார்கள் நாமக்கல் வாசிகள்.

இதுமட்டுமல்ல செக்ஸ், எய்ட்ஸ் பாதுகாப்பு போன்ற அடிப்படை விஷயங்களையும் மறந்து அவசரம்என்று தன்னை அழித்துக்கொள்வதும் வேதனையானது.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 0.7 சதவீதத்தினர் எய்ட்ஸ் நோயால்பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் மொத்தமுள்ள 0.7 சதவீதத்தில்மூன்று சதவீதத்தினர் நாமக்கல் அதன் சுற்றுப்பகுதியில் உள்ளவர்கள் என்று பயம் காட்டுகிறதுஇன்னொரு புள்ளிவிபரம்.

நாமக்கல் அரசு மருத்துவ மனையில் கடந்த ஆண்டு துவக்கப்பட்ட எய்ட்ஸ் வார்டில் இதுவரை 152பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 14 பேர் எய்ட்ஸ் நோய்க்கு பலியாகிப்போனார்கள்.இதெல்லாமே கடந்த ஆறுமாதங்களில் நடந்துள்ளது என்கிறது பத்திரிகை குறிப்பு.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் 240 கருவுற்ற தாய்மார்களை பரிசோதனைசெய்ததில் பத்து பேருக்கு எச்.ஐ.வி வைரஸின் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சொல்கிறதுஅந்த பத்திரிகையில் கடந்த வாரம், நாமக்கல் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்மாவட்ட ஆட்சித்தலைவர் கட்டாரியா பேசும்பொழுது மாவட்டத்தில் எய்ட்ஸின் தாக்குதல்நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதற்கென சிகிச்சையளிக்கவும், மக்களிடையேவிழிப்புணர்வு ஏற்படுத்தவும் கூடுதல் நிதி தேவைப்படுகிறது என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் சென்னையை தமைமையகமாக கொண்டு செயல்படும் எய்ட்ஸ்கட்டுப்பாடு அமைப்புக்கு நாமக்கல்லில் எய்ட்ஸ் நோய் பரவுதலை கண்காணிப்பதும் , சிகிச்சையளிப்பதும்மிகவும் சிரமான விஷயம். எனவே , அதிக பாதிப்புக்குள்ளான நாமக்கல் பகுதியிலோ, அல்லதுநாமக்கல்லை உள்ளடக்கி சேலத்திலோ ஒரு மண்டல அளவிலான எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம்ஏற்படுத்த வேண்டும் என்றார்.

எய்ட்ஸ் விளம்பரங்களும் , மக்களிடையே விழிப்புணர்வுக்கும் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறதுஎன்றாலும், நாமக்கல் பகுதிகளில் இன்னும் அதிகமான கவனம் செலுத்த வேண்டும் என்பதேநாமக்கல் வாசிகளின் வேண்டுகோள். செய்யுமா தமிழக அரசு?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X