தமிழகத்தில் இன்று
"காடுகளைப் பாதுகாக்க ஆதிவாசிகளால்தான் முடியும்
கோவை:
தமிழகத்தில் வனப் பகுதிகளைப் பாதுகாக்க ஆதிவாசிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று வனத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
கோவையில் தமிழக காடு வளர்ப்புத் திட்டக் கருத்தரங்கை செவ்வாய்க்கிழமை அவர் துவக்கி வைத்துப் பேசியதாவது:
வனப் பகுதியில் உள்ள வளங்களைத் திருடும் குற்றவாளிகளைத் தண்டிப்பதில் வனத்துறையினர் ஆர்வம் காட்ட வேண்டும். இதை விடுத்து பொதுமக்களுக்குஇடையூறாக இருக்கக் கூடாது. அவர்கள் மீது பொய்யான புகார்களைக் பதிவு செய்யக்கூடாது.
சந்தனம் கடத்துவோர், மிருகங்களை வேட்டையாடுவோரைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும். வனத்துறையினருக்காக ரூ.45 லட்சம் மதிப்பில்துப்பாக்கிகள் வாங்கித் தரப்பட்டுள்ளன.
வனப்பகுதியில் இயற்கையாகக் கிடைக்கும் கடுக்காய், நெல்லிக்காய், உலர் காய்கறிகளை ஆதிவாசிகள் பறித்து பிழைத்து நடத்தி வருகின்றனர்.
இதை வனத்துறையினர் பறிதல் செய்து அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தனர். இதனால் ஆதிவாசிகளின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர்.ஆதிவாசிகள்தான் காடுகளில் ஆடுமாடுகளுடன் திரிந்து காட்டுக்குப் பாதுகாவலர்களாக விளங்கி வருகின்றனர்.
முதலில் கொடுக்கும் வேலை மாற்றல் உத்தரவை வனத்துறையில் பெற்றுக் கொள்ளவேண்டும். வேறு இடம் கேட்டு அரசு அதிகாரிகளுக்குத்தொல்லை கொடுக்கக்கூடாது.
மாற்றல் பெற என்னை நேரில் வந்து சந்திக்கலாம் அல்லது முறைப்படி துறையின் மூலம் விண்ணப்பிக்கலாம். இடைத் தரகர்களை நம்பவேண்டாம்.
பொள்ளாச்சிப் பகுதியில் ஒரு மடை விட்டு ஒரு மடைப் பாசனத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான இதனைநிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றார் துரைமுருகன்.
தலைமை வனப் பாதுகாவலர் குமாரவேலு, முதன்மை வனத் துறை அதிகாரி சித்ராப்பு மற்றும் வனத்துறை அதிகாகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications