தமிழகத்தில் இன்று
மண்டேலா பிறந்த நாளை 2000 பேருக்கு முடிவெட்டிக் கொண்டாடியவர்
பெங்களூர்:
தென் ஆப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் பிறந்தநாளை பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் 2000 சிறைக்கைதிகளுக்கு இலவசமாக முடிவெட்டிக் கொண்டாடினார்.
மண்டேலாவுக்கு செவ்வாய்க்கிழமை 82வது பிறந்த நாள். அவர் தனது இல்லத்தில் அமைதியாகக்கொண்டாடினார். ஆனால் பெங்களூரைச் சேர்ந்த அமெரிக்கன் முடிதிருத்தகத்தின் உரிமையாளர் எம்எஸ்.முத்துராஜ் என்பவர் வித்தியாசமாக கொண்டாடினார்.
பெங்களூர் மத்திய சிறைச்சாலையிலுள்ள 2000 கைதிகளுக்கு இலவசமாக முடி வெட்டி தனது அபிமானதலைவரான நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடினார்.
2000 பேருக்கு முடி வெட்ட 400 முடிதிருத்தும் தொழிலாளிகள் பயன்படுத்தப்பட்டனர். சிறை அதிகாரிகள்இந்த நிகழ்சிக்காக விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஆயிரக்கணக்கான பேருக்கு முடிவெட்டுவது முத்துராஜுக்கு இது முதல் முறையல்ல. மண்டேலாவின் பிறந்தநாளை 1998-ம் ஆண்டு முதல் இப்படித்தான் வித்தியாசாக கொண்டாடி வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்குமுன்னால் குடிசைப் பகுதியில் வாழும் 5000 பேருக்கு இலவசமாக முடிவெட்டி விட்டார்.1999ம் ஆண்டுஇவர் 25 பேருடன் மாநிலம் முழுவதும் சென்று ஒரு லட்சம் தலித் மக்களுக்கு இலவசாமாக முடி வெட்டிவிட்ட ார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications