தமிழகத்தில் இன்று
புலிகள் இறந்ததற்கு நான் ஏன் ராஜினாமா செய்யவேண்டும் - டி.ஆர். பாலு
சென்னை:
ஒரிஸாவில் நந்தன்கானன் உயிரியல் பூங்காவில் 12 புலிகள் இறந்ததற்கு நான் ஏன் ராஜினாமா செய்யவேண்டும். அதில் என்னுடையதவறு ஏதும் இல்லை என்று மதிதய வனத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
ஒரிஸா தலைநகர் புவனேஸ்வர் அருகேயுள்ள நந்தன்கானன் உயிரியல் பூங்காவில் சமீபத்தில் அரிய வெள்ளைப் புலிகள் உள்பட 12 புலிகள்இறந்துவிட்டன. இது தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று நான் ஏன்விலக வேண்டும் என்று பாலு கூறியுள்ளார்.
உயிரியல் பூங்கா பராமரிப்பு நிபுணர்கள் மற்றும் விலங்கியல் பூங்கா மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கருத்தரங்குசென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இக் கருத்தரங்கைத் துவக்கி வைத்த பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
உயிரியல் பூங்காவில் புலிகள் இறந்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்யவேண்டும் என்றுமத்திய அமைச்சர் மேனகா காந்தி கேட்டுக் கொண்டுள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. நான் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று மேனகாகாந்தி என்னிடம் நேரடியாக கேட்கவில்லை.
புலிகள் இறந்ததற்கு உயிரியல் பூங்கா நிர்வாகத்தினரின் அஜாக்ரதை காரணமாக இருக்கலாம். அது பற்றி மாநில அரசு விசாரித்துவருகிறது. விசாரணை முடிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்.
உயிரியல் பூங்காக்களில் புலிகள் இறப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் 78புலிகள் இறந்துள்ளன என்றார் டி.ஆர். பாலு.
இதற்கிடையே, பாலுவை தான் ராஜினாமா செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டதாக பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்தியை மேனகாகாந்தி மறுத்துள்ளார். அச் செய்தி தவறு என்றும், ராஜினாமா செய்யச் சொல்லி டி.ஆர். பாலுவை தான் கேட்டுக் கொள்ளவில்லைஎன்று அவர் கூறியுள்ளார்.
நந்தன்கானன் உயிரியல் பூங்காவில் புலிகள் இறந்ததற்கு மாநில அமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டுமே தவிர, மத்தியஅமைச்சரை அதற்குப் பொறுப்பு என்று கூற முடியாது என்றார் மேனகா காந்தி.
இது தொடர்பாக டி.ஆர். பாலுவுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications