தமிழகத்தில் இன்று
விவசாயிகளை ஏமாற்றுவதே முதல்வரின் ஒரே வேலை - சொல்கிறார் ஜெயலலிதா
சென்னை:
விவசாயிகளை ஏமாற்றுவதுதான் தனதுமுழு நேரப் பணி என்பதை கருணாநிதி மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிகார மமதைப் பேயாக மாறி முன்னுக்கு பின் முரணாக உளறி விவசாயிகளின் வயிற்றெரிச்சலை கருணாநிதி கொட்டிக் கொள்கிறார்.
பிழி திறனைப் பொறுத்து கரும்புக்கு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கருணாநிதி அறிவித்துள்ளார். கருணாநிதியின் இந்த அறிவிப்பால் விவசாயிகளுக்குஎள்ளளவும் நன்மை இல்லை. இது ஒரு மோசடி அறிவிப்பாகும்.
தமிழ்நாட்டு விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே கரும்பை விளைவிக்கின்றனர். கரும்புக்கு உரிய நேரத்தில் "கட்டிங் ஆர்டர் (வெட்டும்உத்தரவு) கொடுக்கப்பட்டு உடனுக்குடன் அரைக்கப்படுவதில்லை.
விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதில் கருணாநிதி செய்யும் குளறுபடியால் கரும்பு உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும் தணணீர் இன்றி செத்து மடியும் அவலநிலைமை நீடிக்கிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் விளையும் கரும்புக்கு 8.5 முதல் 9 சதவீதம் வரை தான் பிழி திறன் உள்ளது.
கருணாநிதி அறிவிப்பின்படி 10 சதவீத பிழி திறன் உள்ள கரும்புக்கு தமிழக விவசாயிகள் எங்கே போவார்கள்? எங்கோ உள்ள ஒரு சில ஆலை விவசாயிகள்பயன்படவும், ஒட்டுமொத்தக் கரும்பு விவசாயிகள் ஏமாற்றப்படவும் கருணாநிதி செய்த அறிவிப்பு காரணமாக அமைந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இதே கருணாநிதி என்ன சொன்னார்? கரும்பு விலை, கரும்பின் பிழி திறனை பொறுத்துத்தான் நிர்ணயம் செய்யப்படும். தமிழ்நாட்டில்சுமார் 8 சதவீத அளவிற்கு தான் பிழி திறன் இருக்கிறது. பிற மாநிலங்களில் பிழி திறன் 9 முதல் 10 சதவீதம் வரை உள்ளது என்று கருணாநிதி முழங்கினார்.
இப்போது தமிழ்நாட்டில் விளையும் 10 சதவீத பிழி திறன் கொண்ட கரும்புக்கு மட்டும் டன்னுக்கு ஆயிரம் ரூபாய் அளிப்பதாக கருணாநிதி அறிவிப்பது உலகமகா மோசடி அல்லவா? விவசாயிகள் என்ன ஏமாந்தவர்களா? அவர்கள் தலையில் கருணாநிதி தனது மோசடி மிளகாயை அரைப்பது நியாயமா?
இந்த சில மாதங்களுக்குள் தமிழ்நாட்டின் மண் வளத்தைக் கருணாநிதி மேம்படுத்தி விட்டாரா? இல்லை விவசாயிகளை ஏமாற்றுவது தான் தன் முழு நேரமுதல்வர் பணி என்பதை கருணாநிதி மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறாரா? என்று தெரியவில்லை. கொடுக்காதவன் சினை ஆட்டைப் பிடித்துக் காட்டியதாகக்கிராமத்தில் சொல்வார்கள். அதே வேலையைத்தான் கருணாநிதி செய்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்.
தமிழ்நாட்டு விவசாயிகளை வித்தியாசப்படுத்திப் பார்க்கும் அறிவிப்பை கருணாநிதி உடனடியாக கை விட்டு விட்டு, தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தி செய்யும் அனைத்துவிவசாயிகளுக்கும் டன்னுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் பாக்கி வைத்திருக்கிற 300 கோடி ரூபாயை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்வதை விட்டு விட்டு வெற்றுஅறிவிப்புகள் செய்து விளம்பரம் தேடும் கருணாநிதிக்கு என் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications