For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

எச்.எம்.டியை காப்பாற்ற மத்திய அரசு முயற்சி

டெல்லி:

எச்.எம்.டி. நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க 2.5 பில்லியன் டாலர் அளவுக்கு அதில் முதலீடு செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

மேலும் நஷ்டத்தில் இயங்கும் இதன் 5 பிரிவுகளை மூடவும் திட்டமிட்டுள்ளது. எச்.எம்.டியை பிரித்து 3 புதியபிரிவுகளைத் துவக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிறுவனத்தில் அதிகப்படியாக உள்ள ஊழியர்களை வெளியேற்ற விருப்ப ஓய்வுத் திட்டத்தையும்(வி.ஆர்.எஸ்.) அரசு அறிமுகம் செய்யும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பாண்டுகள் வழங்கப்படும். இந்தபாண்டுகளுக்கு அரசு உத்தரவாதமும் அளிக்கும்.

அடுத்த 2 ஆண்டுகளில் மட்டும் 6,400 ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர். எச்.எம்.டியின் வாட்ச் தயாரிப்புப் பிரிவுஒரு தனி நிறுவனமாகவே மாற்றப்படும். இதன் டிராக்டர் தயாரிப்பு பிரிவில் தனயார் முதலீட்டுக்கு வழி வகைசெய்யப்படும்.

காஷ்மீரில் உள்ள நஷ்டத்தில் இயங்கும் இந்த நிறுவனத்தின் ஆலைக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசுதொடந்து நிதி உதவி செய்யும்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X