தமிழகத்தில் இன்று
தமிழகத்தில் உல்பா தீவிரவாதிகளின் ரகசிய முகாம் - போலீஸார் அதிரடிச் சோதனை
சென்னை:
தமிழகத்தில் உல்பா தீவிரவாதிகள் ரகசிய முகாம் அமைத்து விடுதலைப் புலிகளுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சித்து வந்த சதித் திட்டம் தெரியவந்துள்ளது.தமிழகம் வந்த அஸ்ஸாம் போலீஸார், வேலூரில் நடத்திய அதிரடிச் சோதனையில் உல்பா தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சமீபகாலமாக கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறும் தாக்குதல் சம்பவங்களின் பின்னணி குறித்து நாடு முழுவதும் தீவிர விசாரணைமேற்கொள்ளப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகத்தில் ரகசிய சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விசாரணையில் தாக்குதல் சம்பவங்களுக்கும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த உல்பா தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது. உடனேஇது குறித்து அஸ்ஸாம் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. அதன்படி அஸாஸாம் போலீஸார் தென் மாநிலங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில் உல்பா தீவிரவாதிகள் நாடு முழுவதும் பரவி, அந்தந்த மாநில தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டு வருவதாக தெரியவந்தது. மேலும் உல்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய தளபதியான ஹசன் அலி என்பவர் தமிழகத்தில்தங்கியிருக்கும் தகவல் தெரிந்தது.
தமிழகத்தில் குறிப்பாக வேலூரில் தங்கி விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கும், உல்பா தீவிரவாத அமைப்புக்கும் இடையேதொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் ஹசன் அலி ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
வேலூரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த ஹசன் அலியை தமிழகப் போலீஸார் உதவியுடன் அஸ்ஸாம் மாநில போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.வேலூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் செய்துவிட்டு மேல் விசாரணைக்காக அவரை அஸ்ஸாமுக்குக் கொண்டு சென்றுள்ளனர் அம் மாநில போலீஸார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications