தமிழகத்தில் இன்று
போலீஸ்காரர்கள் போல் நடித்த வாட்ச்மேன்கள் கைது
சென்னை:
போலீஸ்காரர்களைப் போல் வாகனச் சோதனையில் ஈடுபட்ட இரண்டு வாட்ச்மேன்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெரம்பூர் ஜி.கே.எம்.காலனியை சேர்ந்த பாஸ்கர் (48), கோடம்பாக்கம் மேற்கு சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணதாசன் (38)இருவரும் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
வர்த்தக நிறுவனங்கள், பிரபலங்கள் வீடுகளில் வாட்ச்மேன் வேலை செய்து வந்த இவர்களுக்கு போலீஸ்காரர்களைப் போல காக்கிச் சட்டை, காக்கிபேண்ட், தொப்பியுடன் சீருடை கொடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் சீருடை அணிந்துகொண்டு சைதாப்பேட்டையில் ஒரு முக்கிய சாலைக்கு ஆட்டோவில் சென்று இறங்கினர்.
ஆட்டோவை அனுப்பி வைத்து விட்டு இருவரும் சாலையின் நடுவே வந்தனர். அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி போலீஸார் போல்சோதனையிட்டனர். சில பயணிகளின் பைகள், பெட்டிகளையும் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை.
சந்தேகம் வந்த சிலர் அங்கிருந்த காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். உடனே மாற்று உடையில் சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர்.வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டுக் கொண்டிருந்த இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த காக்சி சீருடையை கழற்றினர். அதன் பிறகு இருவரையும்,அவர்கள் அணிந்திருந்த காக்கி நிற சீருடையையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸார் ஒப்படைத்தனர்.
காக்கி சீருடை அணிந்து போலீஸார் போல் நடிக்கும் யோசனையைக் கூறிய மற்றொரு வாட்ச்மேனைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications