தமிழகத்தில் இன்று
செப்படி வித்தை அரசியல் நடத்துகிறார் முதல்வர் - த.மா.கா. கிண்டல்
சென்னை:
கரும்புக்கு டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருப்பது செப்படிவித்தை அரசியல் என்று தமாகா கிண்டல் செய்துள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கொள்முதல் விலையாகத் தரப்படும் என்றும், கருப்புபயிரிடப்படும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின் தடைஉடனடியாக நீக்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது கரும்பு விவசாயிகளையும், தமிழக விவசாயப் பெருங்குடி மக்களையும் ஏமாற்றுவதற்காக நடத்தப்பட்டகண்துடைப்பு அறிவிப்பு. இடுபொருள் விலை ஏற்றத்தாலும், உற்பத்தி பொருளுக்கு விலை இல்லாததாலும் உடலும்உள்ளமும் நைந்து போயிருக்கும் விவசாயிகளைப் பொறுத்தவரை இந்த அறிவிப்புகள் வெறும் காகிதஅறிவிப்புகளே.
கரும்பின் கொள்முதல் விலை எப்போதுமே அதன் சர்க்கரை சத்து 8.5 சதவீதம் என்கிற அடிப்படையில்தான்நிர்ணயிக்கப்படுகிறது. இதுவரை அகில இந்திய அளவிலும் தமிழகத்திலும் இதுதான் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.
ஆனால், தற்போது 10 சதவீதம் சர்க்கரை சத்துள்ள கரும்புக்கு மட்டும் டன்னுக்கு ஆயிரம் ரூபாய் என்று முதல்வர்அறிவித்திருப்பது போகாத ஊருக்கு வழி சொல்கிற முறையே தவிர வேறு ஒன்றும் இல்லை.
ஏற்கனவே 10 சதவீதம் சர்க்கரை சத்துள்ள கரும்புக்கு தமிழகத்தில் உள்ள சில சர்க்கரை ஆலைகள் ஆயிரம் ரூபாய்வழங்கி வருகின்றன. எனவே அரசின் அறிவிப்பில் எந்தவித புதுமையோ அல்லது புதிய சலுகையோ இல்லை.
அதேபோல கருப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு தன்னிச்சையாக மின் இணைப்புதரப்படாது என்று அறிவித்துக் கொள்வதும், அதன் பின்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு பெரிய சலுகைகளைஅறிவிப்பது போல, தாங்கள் போட்ட தடையை தாங்களே நீக்கிக் கொண்டு பாராட்டிக் கொள்வதும் அரசாங்கத்தின்தகுதிக்கு ஏற்புடையதல்ல.
தடை அமலில் இருந்த காலத்தில் கடன் வசதி கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்ககுஉடனடியாக கிணறு தோண்டவும், மின் இணைப்பு கிடைக்கவும் நிதியுதவி செய்ய தமிழக அரசுமுன் வரவேண்டும்.
கூட்டுறவுக் கடன்களுக்காக ஏழை விவசாயிகளின் குடிசை வீடுகளைக் கூட ஜப்தி செய்ய தயங்காத இந்த அரசு,கரும்பு விவசாயிகளுக்குப் பெரிய கரும்பு ஆலை முதலாளிகள் தரவேண்டிய 400 கோடி ரூபாய் பாக்கிக்காக எந்தமுதலாளியின் பங்களாவை ஜப்தி செய்யப் போகிறது என்பதையும் அரசு தெரியப்படுத்த வேண்டும் என்றார் பீட்டர்அல்போன்ஸ்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications