தமிழகத்தில் இன்று
காஷ்மீர் சுயாட்சிக்கு கருணாநிதி ஆதரவு
சென்னை:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு தமிழக முதல்வர் கருணாநிதி ஆதரவு தெரிவித்துள்ளார்.இருப்பினும் அது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து முடிவு எடுக்கவேண்டும் என்றார் அவர்.
சென்னை வந்துள்ள ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். ஜம்முகாஷ்மீர் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சி தீர்மானம் குறித்து இருவரும் சுமார் 30 நிமிடத்துக்கும் மேலாக விவாதித்தனர்.
விவாதத்துக்குப் பிறகு இரு தலைவர்களும் நிருபர்களிடம் பேசினர்.
கருணாநிதி:
ஜம்மு காஷ்மீர் மாநில சுயாட்சிக்கு பரூக்கிடம் எனது ஆதரவைத் தெரிவித்தேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கென இந்திய இறையாண்மையில் விசேஷஅந்தஸ்து உண்டு. அதுபற்றி விரிவாக விவாதிக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.
இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு மாநில சுயாட்சி கேட்டு 1976-ம் ஆண்டே தமிழக சட்டப்பேரவையில் நாங்கள் தீர்மானம்நிறைவேற்றினோம்.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல சுயாட்சி கோரிக்கை எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும்.
காஷ்மீர் மாநிலத்துக்கு இந்திய இறையாண்மையின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசேஷ அந்தஸ்தின் அடிப்படையில் இக்கோரிக்கை குறித்து விரிவாகவிவாதிக்கப்பட வேண்டும்.
பரூக் அப்துல்லா:
சட்டப்பேரவையில் நாங்கள் சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும், 1953-ம் ஆண்டுக்கு முந்தைய அந்தஸ்து என்ற நிலையை சுயாட்சி திட்டத்தில்வலியுறுத்த மாட்டோம்.
அத்வானி சொல்வது போல் காஷ்மீர் சுயாட்சி திட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. இப்போதைய திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசுவிவாதிக்க முன்வர வேண்டும். விவாதிக்காமலேயே சுயாட்சி திட்டத்தை மத்திய அரசு நிராகரித்தது தவறு.
எங்களின் சுயாட்சித் திட்டம் பற்றி நிறைய தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. காஷ்மீருக்கென தனியாக ரிசர்வ் வங்கி, கரன்சி என்று நாங்கள்கேட்டதாக கூறப்படுகிறது. அப்படி எதையும் நாங்கள் கேட்கவில்லை.
இந்த விஷயத்தில் எழுந்துள்ள தவறான எண்ணத்தையும், கருத்தையும் போக்குவதற்காகவே ஒவ்வொருவரையும் சந்தித்து வருகிறேன்.
மேலும் காஷ்மீருக்கென விசேஷ அந்தஸ்து உண்டு. இந்தியாவோடு இணைந்த மாநிலம் அல்ல அது. இந்தியாவின் இறையாண்மையை ஏற்றுக்கொண்ட ஒருமாநிலம். அதனடிப்படையில் விசேஷ அந்தஸ்து என்றைக்கும் உண்டு.
நான் ஸ்ரீநகர் திரும்பியதும் சுயாட்சித் திட்டம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளேன்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications