தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

குண்டு வீசி ஊராட்சி ஒன்றியத் தலைவர் படுகொலை

நெல்லை:

அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வெடிகுண்டு வீசித் தாக்கியதில் தசங்கரன்கோயில் ஊராட்சி ஒன்றியத் தலைவரும், அவரது ஆதரவாளர் ஒருவரும்இறந்தனர்.

தமிழகத்தில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே வியாழக்கிழமை நடந்த இச் சம்பவத்தில் மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

இது பற்றிக் கூறப்படுவதாவது:

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் குருசாமியும், அவரது ஆதரவாளர்கள் சிலரும் சங்கரன்கோவில் தெற்கு ரத வீதியில் வியாழக்கிழமை இரவுபேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், அவர்கள் மீது நாட்டுகுண்டுகளை சராமரியாக வீசிவிட்டு ஓடிவிட்டது. இதில் குருசாமி உள்பட 8 பேர்படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வழியில் ஒருவர் இறந்தார். அவர் பெயர் விபரம் எதுவும் தெரியவில்லை.மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு குருசாமி இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்விரோதம் காரணமாக இத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கடந்த ஆண்டு சங்கரன்கோவிலில் மதுபானக் கடை உரிமையாளர் ஒருவர் குண்டுவீசிக் கொல்லப்பட்டார். அக் கொலையில் குருசாமிக்குத் தொடர்புஇருந்ததாகக் கூறப்பட்டது.

அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக மதுபானக்கடை உரிமையாளரின் ஆதரவாளர்கள் இத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில்போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+