தமிழகத்தில் இன்று
நவாஸ் ஷெரீப்புக்கு 14 ஆண்டு சிறை
கராச்சி:
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 14 ஆண்டுகள்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர 2 கோடி ரூபாய் அபராதமும்விதிக்கப்பட்டுள்ளது.
21 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரப் தலைமையில் கடந்த அக்டோபர்மாதம் நடந்த புரட்சியால், பிரதமர் பதவியில் இருந்த நவாஸ் ஷெரீப் பதவி நீக்கம்செய்யப்பட்டார்.
பதவியில் இருந்த போது ஊழலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாககராச்சியில் உள்ள தேசிய நம்பகத்தன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைநடைபெற்றது. இவ் வழக்கில் விசாரணை முடிந்து சனிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில் நவாஸ் ஷெரீப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 14ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும்,அடுத்த 21 ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்கவும் தடை விதிக்கப்பட்டது.
இவ் வழக்கில் மற்றொரு நபராகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த நவாஸ் ஷெரீப்பின்உதவியாளர் சாய்ஃப்-உர்-ரஹ்மான் விடுதலை செய்யப்பட்டார்.
ஏற்கெனவே, விமானக் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் கடந்த6-ம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில் நவாஸ் ஷெரீப்புக்கு ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications