தமிழகத்தில் இன்று
ஒலிம்பிக் போட்டியில் இடையூறு செய்வாராம் ஜார்ஜ் ஸ்பீட்
சுவா:
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இடையூறு ஏற்படுத்துவோம் என்று பிஜியின் புரட்சிப்படைத் தளபதி ஜார்ஜ் ஸ்பீட் மிரட்டல் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 19-ம் தேதி புரட்சியின் மூலம் இந்திய வம்சாவளிப் பிரதமர் மகேந்திர சவுத்ரியின் அரசைக் கவிழ்த்தவர் ஜார்ஜ் ஸ்பீட்.
இந்த புரட்சியின் மூலம் பிஜியில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புரட்சிப் படையின் கோரிக்கைப் படி புதிய அரசு ஏற்படுத்தப்பட்டாலும் அது இன்னும்பதவியேற்றுக் கொள்ளவில்லை. அதற்கு புரட்சிப் படையினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பிஜியில் நிலவும் அரசியல் நெருக்கடியை அடுத்து அந் நாடு மீது ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.மேலும் அந்த நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்காவும் தனது தூதரக உறவை ரத்து செய்துள்ளது.
புரட்சியைக் காரணம் காட்டி பிஜி மீது பொருளாதாரத் தடைகளை விதித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சிட்னியில் நடைபெற உள்ளஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோம் என்று ஜார்ஜ் ஸ்பீட் எச்சரித்துள்ளார்.
பிஜி மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து எனது ஆதரவாளர்கள் சிட்னி ஒலிம்பிக்குக்கு கடுமையான இடையூறைஏற்படுத்துவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications