தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தமிழகத்தில் ரூ 50 கோடி செலவில் கோவில்கள் புதுப்பிப்பு
சென்னை:
தமிழகத்தில் உள்ள 415 கோவில்கள், ரூ 50 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இந்துஅறநிலையத்துறை ஆணையர் சவார்க்கர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் உள்ள 415 கோவில்களை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோவிலைப் புதுப்பிக்க ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயும், ராமேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலைப் புதுப்பிக்க நான்கு கோடி ரூபாயும்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் 40 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
புதுப்பிக்கும் பணி நடக்கும் எல்லா கோவில்களுக்கும், குடிநீர் மற்றும் சாலை வசதிகள் செய்யப்படும்.












Click it and Unblock the Notifications