தமிழகத்தில் இன்று
மீனவர் மோதலில் ஒருவர் படுகொலை
நாகப்பட்டனம்:
பஞ்சாயத்து உறுப்பினர்களை மாற்றுவது தொடர்பாக மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். 7 பேர்படுகாயமடைந்தனர்.
நாகப்பட்டனம், நம்பியார் நகர் மீனவர் கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர் மணி. கடந்த ஆண்டு இந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள 10கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மணி தலைமையில் இருந்த பஞ்சாயத்தைக் கலைத்து விட்டு புதிய நிர்வாகிகளை நியமித்தனர்.
இந்தப் புதிய பஞ்சாயத்தினர் மீனவர் கிராமத்தின் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அதிக அபராதம் விதிக்கிறார்கள். இதனால்இவர்களை நீக்க வேண்டும் என்று கலைக்கப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் மணி சார்பில் புகார் கூறப்பட்டது.
இந்நிலையில் 21 ம் தேதி கிராம பஞ்சாயத்துக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மணிசார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் பஞ்சாயத்துக் கூட்டம் முடிந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை எதிர்கோஷ்டியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மணி தரப்பினரை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் ராஜூ என்பவர் சம்பவஇடத்திலேயே இறந்தார். 7 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தால் நாகைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications