தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

வானில் ஒரு "டைட்டானிக்"

பாரீஸ்:

கறுப்புப் பெட்டி கிடைத்தது:

விபத்துக்குள்ளான கான்கார்டு விமானத்தின் கறுப்புப் பெட்டியை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ளனர்.

பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ள இப் பெட்டியில் என்ன பதிவாகியுள்ள என்பதை சோதித்தபிறகுதான் விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றுஅதிகாரிகள் தெரிவித்தனர்.

பாரீஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விமானம் விபத்துக்குள்ளானது. புறப்பட்டதிலிருந்து விபத்துக்குள்ளான கடைசி நிமிடம் வரைவிமானத்துக்குள் என்ன நடந்தது என்ற முழு தகவல்களும் கறுப்புப் பெட்டியில் பதிவாகியிருக்கும்.

விமான சர்வீஸ் தொடரும் --- பிரிட்டிஷ் ஏர்வேஸ்

பாரீஸ் அருகே கான்கார்டு விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து தனது இரு கான்கார்டு விமான சர்வீஸ்களை ரத்து செய்ய பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் அந்தசர்வீஸுகளை மீண்டும் தொடர முடிவு செய்துள்ளது.

உலகிலேயே பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்கள் மட்டுமே கான்கார்டு விமானங்களை இயக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் பிரான்ஸ் நிறுவன தொழில்நுட்ப நிபுணர்களுடன் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுவன நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், விரைவில் கான்கார்டு விமானசர்வீஸ் தொடரும் என்று நம்புவதாகவும் அதிகாரிகள் அந் நிறுவன தரிவித்தனர்.

விபத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை:

கான்கார்டு விமானம் விபத்துக்குள்ளானதற்கும், பயங்கரவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான இன்ஜின் திடீரென்று தீப்பிடித்ததால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பயங்கரவாதிகளின் சதி இருக்க வாய்ப்பில்லை என்று அவர்கள்தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+