தமிழகத்தில் இன்று
ஸ்ரீநகரில் ஒரே நாளில் 4 குண்டு வெடிப்புகள்
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஒரே நாளில் 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன. மாநிலத்தின் பல பகுதிகளில் நடந்த சண்டைகளில் 13 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகரில் தால் ஏரிக் கரையில் உள்ள போலிவார்டு என்ற பகுதிக்கும் ஷாலிமாருக்கும் இடையே புதன்கிழமை பிற்பகல் தொடர்ச்சியாக 4 குண்டுகள்வெடித்தன.
இந்த குண்டு வெடிப்புகளில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பில்லை. குண்டு வெடிப்புகளை அடுத்து அப் பகுதியில் தீவிர பாதுகாப்பு மற்றும் குண்டுவைத்தவர்களைத் தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸிபுல் முஜாஹிதீன் என்ற அமைப்புஅடுத்த மூன்று மாதத்துக்கு தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை என்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட மறுநாளே 4 இடங்களில் குண்டு வெடிப்புகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நவகடல் செளக் என்ற இடத்தில் போலீஸ் குழுவினர் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். இதில் இரு போலீஸார்காயமடைந்தனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகரில் தீவிரவாதிகளின் மறைவிடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பாதுகாப்புப் படை அதிகாரிகள்தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications