தமிழகத்தில் இன்று
தீவிரமடைகிறது தேயிலை விவசாயிகள் போராட்டம்
கோவை:
நீலகிரியில் தேயிலை விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
நீலமலை விவசாயிகளின் சார்பில் செவ்வாய்க்கிழமையும் சாலை மறியல் நடந்தது. தமிழ்மாநிலக் காங்கிரஸ்தலைவர் சுப்ரமணியன் தலைமையில் 22 விவசாயிகள் சாகும் வரை உண்ணா விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தேயிலை விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. ஜூலை23ம் தேதி மாவட்ட கலெக்டர் சிவசங்கரன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசு உடனடியாகநடவடிக்கை எடுக்காததால் மீண்டும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து கடந்த இரண்டுநாட்களாக இப்பேராட்டம் தொடர்கிறது.
ஜூலை 24ம் தேதி நடந்த போராட்டத்தில் ஆளும் கட்சியினர் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர்.இதனால் எல்லநள்ளியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் பேராட்டம் செவ்வாய்க்கிழமையும்தொடர்ந்தது. சாலை மறியலில் நீலமலை விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்றனர்.
சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பகல் 12 முதல் மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மறியலில்ஈடுபட்டனர். இதனால், ஊட்டியிலிருந்து வரும் பஸ்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாகத் திருப்பி விடப்பட்டது.
எனவே, புதன்கிழமை நடக்கும் போராட்டத்தில் கோத்தகிரி உள்பட அனைத்துப் பகுதிகளிலும் போராட்டம்நடத்தப் போவதாக அரசியல் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இந்நலையில், நீலகிரி மாவட்ட தமிழ்மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்ரமணியம் தலைமையில்எல்லநள்ளியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரியில் நிலவும் பதட்டமான சூழ்நிலையைக் கையாள கோவை மாவட்டத்திலிருந்து அதிரடிப் படையினர்மற்றும் போலீசார் விரைந்துள்ளனர்.
மேலும், எவ்வித அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க, கோவை மாவட்ட எஸ்.பி.,தாமரைக் கண்ணன் மற்றும் நீலகிரிமாவட்ட கலெக்டர் சிவசங்கரன், எஸ்.பி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications